முஸ்லீம் நபரை திருமணம் செய்த இந்து பெண்ணுக்கு நடந்த கொடுமை என்று பரவும் தகவல் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’பெங்களூருவில் முஸ்லீம் நபரை திருமணம் செய்த இந்து பெண்ணுக்கு நடந்த கொடுமை’’, என்று நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *பெங்களூருவில் ஒரு பெண் ஐடி நிபுணர் முகமது முஷ்டாக்கை மணந்தார். அவர்கள் தங்கள் குழந்தையின் பிறந்தநாளில் இந்து சடங்குகளின்படி விளக்கேற்றினர். அவர் அவளை எப்படி நடத்தினார் என்று பாருங்கள். இதை ஒவ்வொரு இந்து பெண்ணும், முழு நாடும் பார்க்க வேண்டும்.

A girl in Bengaluru got married to IT professional Mohammed Mushtaq. She lit a lamp on their child’s birthday as per Hindu rituals. See how he treated her. ☝️This must be seen by every Hindu girl and the whole country.*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல, என்று தெரியவந்தது. மேலும், இது கடந்த 2015ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம், இதில் தொடர்புடைய கணவன் – மனைவி இருவருமே முஸ்லீம்; இந்து அல்ல…

India Today Link   

இதன்படி, மேற்கண்ட வீடியோவில் காணப்படுவோர் முகமது முஷ்டாக் மற்றும் அவரது மனைவி ஆயிஷா பானு. இவர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. முஷ்டாக் பெங்களூருவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். முஷ்டாக் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயிஷாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

இந்த சூழலில், கடந்த 2015ஆம் ஆண்டு, இவர்கள் தங்களது மகனின் பிறந்தநாளை ஒரு ஹோட்டலில் கொண்டாடினர். அப்போது, அந்த நிகழ்வை காட்சிப்படுத்துவதற்காக முஷ்டாக் கேமராவை பொருத்திக் கொண்டிருந்தபோது, ஆயிஷா கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளார். இதனால், முஷ்டாக் ஆயிஷாவை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிதான் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

முழு விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

அடுத்தப்படியாக, முஷ்டாக் மற்றும் ஆயிஷா தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவகாரம் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

Live Law PDF

இதன்மூலமாக, முஷ்டாக் மற்றும் ஆயிஷா Sunni Muslims என்று நமக்கு தெளிவாகிறது. இது Love Jihad அல்லது Inter Religious திருமணம் கிடையாது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:முஸ்லீம் நபரை திருமணம் செய்த இந்து பெண்ணுக்கு நடந்த கொடுமை என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply