அலிகார் நீதிமன்ற நீதிபதிக்கு எச்சில் துப்பிய தண்ணீர் கொடுத்த முஸ்லீம் பியூன் என்ற தகவல் உண்மையா?
‘’ அலிகார் நீதிமன்ற நீதிபதிக்கு எச்சில் துப்பிய தண்ணீர் கொடுத்த முஸ்லீம் பியூன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நீதிமன்றத்தின் நீதிபதி அறையில், நீதிபதியின் இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் கேனிலிருந்து தண்ணீர் எடுத்து வருமாறு அந்த நீதிபதி அவரின் முஸ்லீம் பியூனிடம் கேட்டபோது, அந்த ஜிஹாதி தண்ணீரை ஒரு கோப்பையில் ஊற்றி அதில் துப்பினார். அங்கே ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தண்ணீர் கோப்பையில் துப்பியபோது கையும் களவுமாக பிடிபட்டார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட பதிவில் கூறியுள்ளது போன்று, இது உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவமா என்று தகவல் தேடினோம்.
அப்போது, இது கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் என்று தெரியவந்தது. ஆனால், இவ்வாறு எச்சில் துப்பிய நபர் முஸ்லீம் இல்லை; இந்து ஆவார்.
அலிகார் நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்த விகாஸ் குப்தா என்ற நபர், பெண் நீதிபதி ஒருவருக்கு தண்ணீர் தரும்போது இவ்வாறு எச்சில் துப்பி, கொடுத்ததாக, 2018ம் ஆண்டு வீடியோ பரவியதன்பேரில் அப்போதே அந்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றிய விசாரணக்கும் உத்தரவிடப்பட்டது.
Timesofindia Link l Amar Ujala l Jagran
ஆனால், 6 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை எடுத்து, முஸ்லீம் ஒருவர் இவ்வாறு எச்சில் துப்பி, இந்து மத நீதிபதிக்கு தண்ணீர் கொடுத்ததாக, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் தற்போது தகவல் பகிரப்படுகிறது.
X வலைதளத்தில் ஒருவர் உண்மை தெரியாமல் மேற்கண்ட வீடியோவை பகிர்ந்த நிலையில், அதற்கு அலிகார் போலீசார் மறுப்பு தெரிவித்து, பதில் பகிர்ந்திருந்ததையும் கண்டோம்.
இதுதொடர்பான, நமது ஆங்கில மொழிப் பிரிவினர் வெளியிட்ட ஃபேக்ட்செக் கட்டுரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் செய்த தவறு தொடர்பான வீடியோ ஒன்றை எடுத்து, மதச்சாயம் பூசி அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே சிலர் தற்போது வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:அலிகார் நீதிமன்ற நீதிபதிக்கு எச்சில் துப்பிய தண்ணீர் கொடுத்த முஸ்லீம் பியூன் என்ற தகவல் உண்மையா?
Fact Check By: Fact Crescendo TeamResult: MISLEADING