‘’ஹிஜாப் அணிய மாணவியருக்கு அனுமதி,’’ என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’மாணவிகள் பள்ளிகள் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்ல கல்லூரி மேனேஜ்மென்றுகளுக்கோ பிறின்ஸிபலுக்கோ தலைமை ஆசிரியர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை மும்பை உயர்நீதிமன்றம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

உண்மை அறிவோம்:
சமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப் சர்ச்சை நாடு முழுவதும் பெரும் விவாதம் ஏற்படுத்தியது. இதுபற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் பரவின. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்து, நாமும் சில ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2

இதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட வகையில் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து, இனி ஹிஜாப் அணிய தடையில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக, பரப்புகின்றனர்.

உண்மையில், இப்படி சமீபத்தில் எந்த உத்தரவையும் மும்பை உயர் நீதிமன்றம் வெளியிடவில்லை. இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் வெளியான தீர்ப்பு வேறொன்றாகும். அதன் விவரத்தை கீழே இணைத்துள்ளோம்.

The Hindu Link

இதுதொடர்பான தேடலில், மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் இப்படி எந்த தீர்ப்பும் வெளியிடவில்லை என தெளிவாக தெரியவருகிறது. கூடுதலாக, The Quint வெளியிட்ட ஃபேக்ட்செக் ஆய்வுக்கட்டுரை லிங்க் மட்டுமே கிடைத்தது.

இதன்பேரில், மீண்டும் தேடியபோது, நியூஸ் 18 ஊடகம் கடந்த 2018 ஆண்டில் வெளியிட்ட செய்தி ஒன்றை கண்டோம். அந்த செய்தியில், ‘’தானே பகுதியில் செயல்படும் சாய் ஹோமியோபதி காலேஜில் படிக்கும் மாணவி மிஹிர் தேசாய், தனக்கு தனது மத நம்பிக்கையின்படி ஹிஜாப் அணிந்து படிக்க அனுமதி தர வேண்டும் அல்லது வேறு கல்வி நிறுவனத்திற்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அந்த மாணவி தலையில் துணி கட்டியபடி, கவுன் போன்ற உடை அணிந்து வந்து படிப்பதற்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அனுமதிக்க வேண்டும் என்றும், வேறு கல்வி நிறுவனத்திற்கு மாற்றம் செய்ய இயலாது என்றும் கூறி தீர்ப்பளித்தது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

News 18 Link

இதே செய்தி மற்ற ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு அந்த குறிப்பிட்ட மாணவிக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கும், தற்போதைய ஹிஜாப் சர்ச்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

The Indian Express Link I Asian Age Link

இந்த செய்தியை எடுத்து, புதியதுபோல குறிப்பிட்டு, பலரும் சமூக வலைதளங்களில், 2022ம் ஆண்டில் நிகழ்ந்தது போல தகவல் பரப்பி, சாமானிய வாசகர்களை குழப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ஹிஜாப் விவகாரம்; மும்பை உயர் நீதிமன்றத்தின் 2018 உத்தரவு தற்போது பரவுவதால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer

Result: Partly False