துணிவு படம் தோற்றதால் விஜயின் குடும்பம் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என்று தந்தி டிவி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

சமூக வலைதளங்களின் வரவு காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்ட துணிவு, வாரிசு படங்கள் பற்றி பரபரப்பான செய்திகள் பகிரப்படுகின்றன. அஜித் ரசிகர்கள் தங்களது படம் வெற்றி பெற்றதாகவும், விஜய் ரசிகர்கள் தங்களது படம்தான் நம்பர் 1 எனவும் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதையும் காண முடிகிறது.

அதேசமயம், நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை பற்றியும் சில செய்திகள் பகிரப்படுவதைக் கண்டோம். அவை எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

Tamil hindustantimes link l cineulagam link

இந்த சூழலில், மேற்கண்ட வகையில் துணிவு படம் தோல்வியடைந்ததால், அஜித் ரசிகர்கள்தான் விஜயின் குடும்ப வாழ்க்கை பற்றி தகவல் பரப்புவதாக, தந்தி டிவி லோகோவுடன் சிலர் செய்தி பகிர்கிறார்கள். ஆனால், இது உண்மையான செய்தி அல்ல. இப்படி எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. நாம் இதுபற்றி அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:துணிவு படம் தோற்றதால் விஜயின் குடும்பம் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False