
கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன் அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறி ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link
இந்த செய்தியில் ‘கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் தொடர் மின் வெட்டு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதி,’ என்று எழுதியுள்ளனர். 20.10.2022 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்தி பற்றி நாம் விவரம் தேடியபோது, இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் ஊடகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவைக் காண நேரிட்டது.
அந்த செய்திக்கு TANGEDCO அதிகாரப்பூர்வமாக பதில் அளித்திருந்தது. அந்த பதிலில், ‘’ நித்திர விளை பகுதிக்கு 110/11 KV முன் சிறை துணைமின் நிலையத்திலிருந்து நித்திர விளை மின் பாதை வழியாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் நேற்று (20.10.2022) எந்த மின் தடையும் இல்லை. அதன் சுற்றுப்புறங்களில், முன்கூட்டியே உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு, அந்த அறிவிப்பும் ஊடகங்களில் செய்தியாக முதல் நாளே வெளியான பிறகுதான், 20.10.2022 அன்று காலை தொடங்கி, மாலை வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது,’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

மீண்டும் ஒருமுறை அந்த பதிவையும், அதற்கான பதிலையும் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, உரிய அறிவிப்பு வெளியிட்ட பிறகே நித்திர விளை தவிர்த்து சுற்றுப்பகுதியில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதனை சரிபார்க்காமல், அவசர கதியில் நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டிருப்பதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன்னறிவிப்பு இன்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Misleading
