FactCheck: சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ட்வீட் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பகிரப்பட்டுள்ள ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘’மதிப்பிற்குரிய சின்னமா முழுமையாக குணமடைந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மத்திய பா.ஜ.க அரசிடம் சீக்கித் தவிக்கும் அதிமுகவை மீட்க உங்கள் வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி வாசகர்கள் சிலர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) வழியே கேட்டுக் கொண்டனர். 

உண்மை அறிவோம்:
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கர்நாடகா சிறையில் இருந்து வி.கே.சசிகலா வரும் ஜனவரி 27, 2021 அன்று விடுதலை செய்யப்படுகிறார் என்று தகவல் வெளியானது. இதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

தற்சமயம், அவருக்கு நிமோனியோ பாதிப்பு, கொரோனா தொற்று உள்ளதாகக் கூறி பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட விவகாரம், தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

TheHindu LinkNDTV Link

இந்நிலையில்தான், ஓபிஎஸ் பெயரில் மேற்கண்ட ஸ்கிரின்ஷாட் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில், அவர் இப்படி வெளியிட்டாரா என்றால், இல்லை என்பதே பதில். 

குறிப்பிட்ட ட்வீட் போலியானது என்று கூறி ஓபிஎஸ் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, அந்த ட்வீட்டில் நிறைய எழுத்துப் பிழைகளும் உள்ளன. ஒரு துணை முதல்வர் உபயோகிக்கும் ட்விட்டர் ஐடியில் இப்படி எழுத்துப் பிழைகளுடன் ட்வீட் வெளியிடுவாரா என்பது சந்தேகம்தான். 

‘’சின்னம்மா,’’ என்பதை, ‘’சின்னமா’’ என்றும், ‘’சிக்கி’’ என்பதை ‘’சீக்கி’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். 21, ஜனவரி 2021, 5.17PM என்று நேரமும் குறிப்பிட்டுள்ளனர். ஓபிஎஸ் ட்விட்டர் ஐடியின் பெயர் @officeof_ops என்று உள்ளது.

ஆனால், அவரது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் ஐடியின் பெயர் @OfficeOfOPS ஆகும்.  

இதுதவிர 21, ஜனவரி 2021 அன்று அவர் வெளியிட்ட ட்வீட்களின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

OPS Tweet Link 1OPS Tweet Link 2

எனவே, @officeof_ops என்ற பெயரில் ட்விட்டர் ஐடி உள்ளதா என்று தேடினோம். அப்போது, அந்த ஐடி, ட்விட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் முடக்கப்பட்டுள்ளதாக, விவரம் தெரியவந்தது. 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ஓபிஎஸ் பெயரில் பகிரப்படும் மேற்கண்ட ட்வீட், போலியாக தயாரிக்கப்பட்ட ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False