பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்தாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்தார்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Archived Link        

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவல், என்று தெரியவந்தது. 

சமீபத்தில் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராஷ்டிரபதி பவனில் சிறப்பு விருந்து வழங்கினார். இதில், பின்னணி பாடகி சைந்தவி ஒரு விருந்தினராக பங்கேற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சைந்தவி, அவரது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் மூலமாக, வெளியிட்டிருந்தார். 

Link 1 l Link 2 

இந்த புகைப்படத்தை எடுத்து, சைந்தவி பாஜக.,வில் இணைந்ததாகக் குறிப்பிட்டு, வதந்தி பரப்புகிறார்கள். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

IANS live l Chennai Times l Social News 

இது தவிர பாஜக தமிழ்நாடு தலைமை அலுவலகம் மற்றும் சைந்தவி தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:பின்னணி பாடகி சைந்தவி பாஜகவில் இணைந்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply