பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்- கி.வீரமணி பெயரில் பரவும் வதந்தி

அரசியல் தமிழகம்

‘’பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்,’’ என்று கி.வீரமணி சொன்னதாகக் கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

இந்த பதிவை உண்மை என நம்பி பலர் ஷேர் செய்வதையும், கமெண்ட் செய்வதையும் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வெளியாகியுள்ளதால், முதலில் இது உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில், புதிய தலைமுறை ஊடகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (@PutiyaTalaimuraimagazine & @PTTVOnlineNews) சென்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகியை தொடர்புகொண்டு, இது உண்மையான செய்தியா என்று விளக்கம் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘’எங்களது பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி செய்தி,’’ என்று மறுத்துவிட்டனர்.

இதுதவிர, இந்த நியூஸ் கார்டு போலியானதுதான் என்பதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது இது போலியான ஒன்றுதான் என்று சந்தேகமின்றி தெளிவானது.

எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் உள்ளதென்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்- கி.வீரமணி பெயரில் பரவும் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •