‘சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்’ என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’கலைஞரை கூட விமர்சியுங்கள் தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சிக்க வேண்டாம்’’, என்று சீமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்! கலைஞரை கூட விமர்சியுங்கள் தயவு செய்து தந்தை பெரியாரை விமர்சிக்க வேண்டாம் சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்.
திராவிட இனத்தின் தலைவர் தந்தை பெரியார் – சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2   

புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட ஒன்று எனவும், புதிய தலைமுறை வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு வேறு எனவும், தெரியவந்தது. இதுதொடர்பாக, புதிய தலைமுறை ஊடகத்தின் ஆசிரியர் குழுவினரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

News18 Tamil Nadu l DMK IT Wing

இவற்றின் மூலமாக, சீமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் எதுவும் வைக்கவில்லை என்பது நமக்கு தெளிவாகிறது. மேலும், உண்மையான நியூஸ் கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:‘சீமானுக்கு முதல்வர் வேண்டுகோள்’ என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: ALTERED