‘’என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ என் மனைவிக்கே செயற்கை முறையில் தான் கருத்தரிப்பு நடந்திருக்கிறது. இப்படியிருக்க என்னால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகச் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?- பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் கேள்வி’’, என்று எழுதப்பட்டுள்ளது.

தந்தி டிவி லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகை விஜயலட்சுமி சமீபத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து, தன்னை ஏமாற்றியதாக புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் சீமான் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்தார். அதில் சீமான் 7 முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பதும் ஒன்றாகும்.

Dailythanthi link l Hindutamil link

மேலும், இந்த புகார் தொடர்பாக விசாரணை சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் மேற்கண்டவாறு சீமான் பேசியுள்ளதாக, சிலர் தகவல் பரப்புகின்றனர்.

ஆனால், இவ்வாறு தந்தி டிவி செய்தி எதுவும் வெளியிடவில்லை. நாம், இதுதொடர்பாக அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பாக சீமான் அளித்த முழு பேட்டியின் விவரம் கீழே தரப்பட்டுளளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’ என்று சீமான் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: False