ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதால் இலவசமாக ரூ.799 ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

False இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதால் இலவசமாக ரூ.799 ரீசார்ஜ் வழங்கப்படுகிறது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *🏆 RCB WIN 2025 IPL TROPHY 🏆* 

 RCB ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதைக் கொண்டாடும் விதமாக, JIO, Vi மற்றும் Airtel ஆகியவை அனைத்து இந்தியர்களுக்கும் 3 மாதங்களுக்கு 799 ரீசார்ஜை இலவசமாக வழங்குகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து இப்போதே ரீசார்ஜ் செய்யுங்கள்.இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே👇” என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது தவறான தகவல், என தெரியவந்தது. ஆம், இவர்கள் பரப்பும் செய்தியில் ipl-25-racharget5.blogspot.com மற்றும் WINZO.APP.LINK ஆகிய லிங்க் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால், அவற்றில் ரீசார்ஜ் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, இது ஒரு வதந்தி, என்று தெளிவாகிறது. 

அடுத்தப்படியாக, இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம், என்று குறிப்பிட்டு, சைபர் கிரைம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதனை ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஐபிஎல் 2025 கோப்பையை RCB வென்றதால் இலவசமாக ரூ.799 ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

Fact Check By:  Pankaj Iyer 

Result: False

Leave a Reply