திமுகவுடன் அடிமை மாதிரி பயணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்று கோபண்ணா கூறினாரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

‘‘திமுகவுடன் அடிமை மாதிரி பயணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது,’’ என்று கோபண்ணா கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ திமுகவுடன் அடிமை மாதிரி பயணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது -காங்கிரஸ் மூத்த கலைவர் கோபண்ணா ஆதங்கம்’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  l Archived Link        

சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ‘’இது போலியான நியூஸ் கார்டு,’’ என்று தெரியவந்தது. 

இந்த நியூஸ் கார்டை வெளியிட்ட X பக்கத்தில் parody account என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, சன் நியூஸ் பெயரில் இயங்கும் போலியான பக்கம் ஒன்று வெளியிட்ட கார்டை எடுத்து, உண்மை போன்று பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது. 

இதுதொடர்பாக, சன் நியூஸ் ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘’எங்களது பெயரில் பகிரப்படும் வதந்தி இது,’’ என்று தெரிவித்தனர். 

அடுத்தப்படியாக, உண்மையான நியூஸ் கார்டின் லிங்க் கிடைத்தது. அதில், ‘’தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் அது தற்கொலைக்கு சமம். 140 ஆண்டுகால காங்கிரஸ் பேரியக்கம்,நேற்று பெய்த மழையில் முளைத்த தவெகவுடன் கூட்டணி சேர்வதா? வேதனையாக இருக்கிறது -காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா ஆதங்கம்,’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:திமுகவுடன் அடிமை மாதிரி பயணிப்பது மிகவும் வேதனையளிக்கிறது என்று கோபண்ணா கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

Leave a Reply