
கெட் அவுட் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் உலக அளவில் 2வது இடத்தில் உள்ளது என்று சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “X தளத்தில் உலகளவில் 2வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ட்ரெண்டாகும் #GetOutStalin” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அதுவும் கேபிள் திருடன் டிவியிலேயே சொல்றான்னா… எவ்வளவு பெருமையா இரிக்கி…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்த சூழலில் தமிழக மக்கள் கெட் அவுட் மோடி என்று கூறுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக, உங்களால் முடிந்தால் கெட் அவுட் மோடி என்று சொல்லிப் பாருங்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலடியாக தி.மு.க-வினர் கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டேகை எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங் ஆக்கினர். இதற்கு மீண்டும் பதிலடியாக பாஜக-வினர் கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேகை டிரெண்டிங் ஆக்கியுள்ளனர். இந்த நிலையில், தி.மு.க ஆதரவு சன் நியூஸ் தொலைக்காட்சியிலேயே கெட் அவுட் ஸ்டாலின் தொடர்பாக பதிவிட்டிருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதை சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டதா என்று அறிய ஆய்வு செய்தோம்.
முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக், எக்ஸ் தள பக்கங்களை ஆய்வு செய்தோம். ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. ஆனால், கெட் அவுட் மோடி என்று டிரெண்ட் ஆன ஹேஷ்டேக் தொடர்பாக நியூஸ் கார்டை பிப்ரவரி 20ம் தேதி வெளியிட்டிருப்பது தெரிந்தது.
அதில், “X தளத்தில் உலகளவில் 2வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் ட்ரெண்டாகும் #GetOutModi” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது தெரிந்தது.
இதை உறுதி செய்துகொள்ள நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் தொடர்பாக சன் நியூஸ் வெளியிட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது என்று சன் நியூஸ் தொலைக்காட்சியே நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளது என்று பரவும் பதிவு தவறானது, எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“கெட் அவுட் ஸ்டாலின்” என்று நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?
Fact Check By: Chendur PandianResult: Altered
