FACT CHECK: டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியை குஜராத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனரா?

டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட சிராஜ் முஹம்மது என்ற நபரை குஜராத்தில் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்கும் நபரை திடீரென்று சிலர் மடக்கிப் பிடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளியைப் பிடிக்கும் காட்சி: […]

Continue Reading

டெல்லி கலவரத்தில் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சாரூக்கானந்தா கைது- ஃபேஸ்புக் விஷமம்

டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி சாரூக்கானந்தா கைது என்று நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கின் படத்தை நிலைத் தகவலில், டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட RSS கைக்கூலி சாரூக்கானந்த ஐயங்கார் கைது. சட்டையை கழட்டியபோது பூணூல் இருந்தது அம்பலம் – டெல்லியிலிருந்து @news7tamil புலனாய்வுதுறை […]

Continue Reading

ஆயுதங்கள் சிக்கியது ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவுகள்

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் ஆயுதங்கள் கிடைத்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதே படத்தை வெளியிட்டு டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் வீடு என்று மற்றொரு தரப்பினர் வைரலாக பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய குடோனில் நூற்றுக்கணக்கான வாட்கள் உள்ளன. அதை போலீசார் கைப்பற்றி காட்சிக்கு வைத்துள்ளனர். சோஃபா முழுக்க இயந்திரத் துப்பாக்கியாக உள்ளது. இந்த மூன்று […]

Continue Reading

டெல்லியில் 40 இஸ்லாமியர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 16 வயது சிறுமி என்று ஒரு சிறுமியின் படத்தை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சிறுமி ஒருவரின் படத்தின் மீது போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது. அதில், “டெல்லி வன்முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் 40 பேரால் கற்பழிக்கப்பட்டு ஒட்டுத்துணியில்லாமல் சாக்கடையில் வீசப்பட்ட 16 வயதே ஆன என் தேசத்துச் சிறுமி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  […]

Continue Reading

கலவரத்தின் போது சிறுவனை அடிக்கும் போலீஸ்;– இது டெல்லியில் எடுக்கப்பட்ட புகைப்படமா?

சிறுவன் ஒருவனை போலீஸ் தாக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கருப்பு நிற சீருடை அணிந்த நபர் ஒருவர் மிகப்பெரிய தடியால் சிறுவன் ஒருவரைத் தாக்குகிறார். நிலைத் தகவலில், “உன் பிள்ளையை இப்படித்தான் அடிப்பாயா வெறி பிடித்த காக்கி மிருகமே” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Abdul Rahman என்பவர் 2020 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். டெல்லி வன்முறை […]

Continue Reading

மோடியின் வாயில் ரத்தம் சொட்டும் அட்டைப் படம் வெளியிட்டதா டைம் இதழ்?

பிரதமர் மோடியின் வாயில் இருந்து ரத்தம் சொட்டும் வகையில் டைம் இதழ் அட்டைப்படம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டைம் இதழின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியின் வாயில் கோரைப் பற்கள் நீண்டு இருப்பது போலவும், அவரது வாயில் இருந்து ரத்தம் வடிவது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “டைம்ஸ் இந்தியா பத்திரிகையின் […]

Continue Reading

போலீஸ் முன்னிலையில் கத்தியை காட்டும் நபர்களின் புகைப்படம்; டெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்டதா?

போலீஸ் முன்னிலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கத்தியோடு பயணிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. டெல்லி கலவரத்தின்போது எடுக்கப்பட்டது என்று பகிரப்படும் இந்த படத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link போலீஸ் அதிகாரி ஒருவர் பின்னால் கை கட்டிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு முன்பாக இருசக்கர வாகனம் ஒன்றில் காவி சட்டை, துண்டு அணிந்த மூன்று பேர் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்கின்றனர். நிலைத் தகவலில், […]

Continue Reading