ரயில் நிலைய நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி… தமிழ்நாட்டைச் சார்ந்ததா?

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I instagram.com I Archive  ரயில் நிலையத்தின் நடைமேடை மூழ்கும் அளவுக்கு வெள்ள நீர் பாயும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “ஈரோடு, சேலம், பங்காருப்பேட் வழியாக செல்லும் பெங்களூர் சிட்டி விரைவு வண்டி இன்னும் சற்று நேரத்தில் மூன்றாவது […]

Continue Reading

‘குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில் மோடி ‘’பாஜக ஆட்சியில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது,’’ என்று பேசுகிறார். அதன் பின்னணியில் சாலை ஒன்றின் நடுவே, ஜேசிபி வாகனம், வேன் என வாகனங்கள் பலவும் புதையுண்டு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. Claim […]

Continue Reading

ஆந்திரா வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜேசிபி உதவியுடன் மீட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களை தன்னுடைய ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சென்று மீட்டு வந்த முஹம்மது சுபஹான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளத்தில் காரில் சிக்கியவர்களை ஜேசிபி வாகனத்தில் சென்று ஒருவர் காப்பாற்றி அழைத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் […]

Continue Reading

குஜராத் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

குஜராத் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலர் உணவு வழங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. கழுத்தளவு நீரிலும் கூட உணவுப் பொருட்களை எடுத்து வந்து தேவைப்படுவோருக்கு வழங்குகின்றனர்.  நிலைத் தகவலில், “ஆடையை வைத்து அடையாளம் காணலாம் : தேசபக்தர்கள் […]

Continue Reading

பங்களாதேஷில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இஸ்கான் உணவு வழங்கியதா?

வங்கதேசத்தில் கலவரக்காரர்கள் இடித்துத் தள்ளிய இஸ்கான் கோவிலில் சமைத்த உணவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெர்மாகோலால் செய்யப்பட்ட படகில் சென்று ஒருவர் உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் ஏதோ எழுதப்பட்டுள்ளது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “வங்கதேசத்தில் […]

Continue Reading

வங்கதேச இஸ்லாமியர்களுக்கு வெள்ள பாதிப்பில் உதவிய இஸ்கான் பக்தர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேச உள்நாட்டு கலவரத்தில் இஸ்கான் கோவிலை தாக்கிய இஸ்லாமியர்களுக்கு தற்போது வெள்ள பாதிப்பின் போது உதவிகள் வழங்கிய இஸ்கான் பக்தர்கள் என்று  ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வங்கதேசத்தில் தாக்குதலுக்கு ஆளான இந்து கோவில் மற்றும் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது என்று இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்த வீடியோ பதிவு உருவாக்கி […]

Continue Reading

வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்று பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இடையே மக்கள் தொழுகை செய்வதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்று வெள்ளம் வேகமாகப் பாய்கிறது. அதன் அருகே உள்ள உள்ள கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்றர். நிலைத் தகவலில், “பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வெள்ளப்பெருக்கு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: வங்கதேசத்தில் […]

Continue Reading

RAPID FACT CHECK: தூத்துக்குடி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மாடுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளத்தில் மாடுகள் அடித்துக் கொண்டு செல்லும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஆடு, மாடுகள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல், முக்காணி, புன்னக்காயல் பகுதிகளில் மழை வெள்ளத்தின் காரணமாக தாமரபரணி ஆற்றில் […]

Continue Reading

மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் வீடியோ தூத்துக்குடியில் எடுக்கப்பட்டதா?

தூத்துக்குடியில் ஏற்பட்ட கன மழை வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. “எல்லாம் போய்விட்டது” என்று ஆண்களும் பெண்களும் அலறும் சத்தம் கேட்கிறது. வீடியோவில், தூத்துக்குடி. இந்த நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் சிக்கிய முதலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை மழை வெள்ளத்தின்போது வெளிப்பட்ட முதலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலை ஒன்றை நாய்கள் கடித்து விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1]சென்னையில் மழை தண்ணி எல்லாம் வடிஞ்சு முதலை மட்டும் மாட்டிக்கிச்சு. [2]ரொம்ப சாதுவான முதலியா இருக்கு போல….!!! [3]இத பிடிக்க ஒரு 50 கோடி நிதி ஒதுக்குவோமா…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

மீட்பு பணியில் சீமான் என்று பரவும் புகைப்படம் 2023ம் ஆண்டு எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் சீமான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் மூங்கில் படகில் செல்வது போன்ற புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நெய்தல் படையுடன் சென்னையில் அதிபர் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது 2023 டிசம்பர் 4ம் தேதி […]

Continue Reading

‘கொண்டு வந்த உணவை சாப்பிட்டு சென்ற பா.ஜ.க-வினர்’ என்று பரவும் படம் உண்மையா?

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு வந்த உணவை பாஜக நிர்வாகிகளே சாப்பிட்டுவிட்டுச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மற்றும் பாஜக-வினர் சமைத்த உணவை எடுத்து வரும் புகைப்படம் மற்றும் அவர்கள் சாப்பிடும் புகைப்படத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடுத்துட்டு வந்த சாப்பாடு நீங்களே சாப்பிடுறீங்களா டா🤦 […]

Continue Reading

பாதாள சாக்கடையில் குப்பை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?

பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை மக்கள் வீசியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாதாள சாக்கடையில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் எடுக்கப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “பொது ஒழுக்கம் கிடையாது! பொது சிந்தனை கிடையாது! குப்பைகளை ரோட்டில் வீசுவதற்கு வெட்கமே கிடையாது! ஆனால் மழை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

சென்னை மழை நீரில் தெர்மாகோல் சவாரி செய்யும் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையில் பெய்த கன மழையில் சாலையில் தெர்மாகோல் படகு சவாரி செய்யும் நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஓடும் மழை வெள்ளத்தில் ஒருவர் ஒய்யாரமாக தெர்மாகோலில் படுத்தபடி படகு சவாரி செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “4000 கோடியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொண்டு முடிக்கப்பட்டது சென்னை மேயர் […]

Continue Reading

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?

லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஆற்றில் திடீரென்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிபீயாவில் அணை ஒன்று தகர்ந்து வரும் பெரு வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையா?

கேரளாவில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிலர் ஆற்றில் குளிக்கும் போது திடீரென்று வரும் காட்டாற்று வெள்ளம் அவர்களை அடித்துச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் பின்னணி குரல் கொடுத்தது போல் ஏதோ பேசுகிறார்கள். நிலைத் தகவலில், “கேரளாவில் அருவியில் குளித்துக் […]

Continue Reading

டெல்லி மழை வெள்ளத்தில் மிதந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி மழை வெள்ளத்தில் தெர்மாகோல் அட்டை படகில் மிதந்த நபர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெர்மாகோல் அட்டை படகில் ஒருவர் ஒருவர் ஒய்யாரமாகப் படுத்தபடி பயணிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணில் “தொலைநோக்கு திட்டம் காண்பவர் நரேந்திர மோடி” என்று பாஜக-வின் பிரசார பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “நேற்று டெல்லி வெள்ளத்தில் மிதந்த போது” […]

Continue Reading

கேரளாவில் காட்டாற்றில் சிக்கிய கார் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

கேரளாவில் பெய்து வரும் கன மழையில் காட்டாற்றில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் தற்போது கன மழை பெய்து வருகிறது ! மலைப்பகுதி காற்றாட்டு வெள்ளத்தில் வண்டிகள் முன்னே செல்ல தயங்கி நிற்க… பின்னால் வேகமாக வந்த […]

Continue Reading

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?

தெலங்கானாவில் கடந்த 2021ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர்களை துணை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீடியோவை தற்போது நடந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு – ஆற்றில் ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்.. பதபதைக்கவைக்கும் […]

Continue Reading

FACT CHECK: சீனாவின் மழை வெள்ளம் என்று பகிரப்படும் ஜப்பான் சுனாமி வீடியோ!

சீனாவில் ஏற்பட்ட பெருமழை வெள்ள காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஆற்றில் வெள்ளம் அடித்து வருவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆற்றில் இருந்த படகுகள், சிறிய கப்பல்கள் எல்லாம் அடித்துச் செல்லப்படுகின்றன. நிலைத் தகவலில், “பயத்தின் உச்சத்தில் சீனா… வரலாறு காணாத மழை. இதன் காரணமாக The Gorges […]

Continue Reading

மழை நீர் தேங்கிய மருத்துவமனை புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டது இல்லை!

பீகார் மருத்துவமனை வார்டுக்கு உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மருத்துவமனை வார்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கும் புகைப்படம், டாக்டர் ஒருவர் டிரை சைக்கிளில் வெள்ளத்துக்கு இடையே அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீகார் அரசு மருத்துவமனையின் அவலநிலையை பாருங்கள்..!!! மருத்துவர்கள், மருத்துவமனை எங்கும் சாக்கடை நீரால் நிரம்பி […]

Continue Reading

பீகாரில் ரூ.264 கோடியில் கட்டிய பாலம் 29 நாளில் விழுந்ததா?

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் ரூ.264 கோடியில் கட்டப்பட்ட பாலம் 29 நாளில் இடிந்து விழுந்தது என்று குறிப்பிட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமீபத்தில் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியானது. அந்த புகைப்படத்துடன் மோடி படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். படத்தின் மீது, “பீகாரில் பாஜக கூட்டணி மெகா ஊழல். ரூ.264 கோடியில் கட்டி […]

Continue Reading