கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா? – வைரல் ஃபேஸ்புக் வதந்தி

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நிலத்தடியில் இருந்து நடராஜர் சிலை எடுக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கீழடியில் கிடைக்கபெற்ற அம்பலத்தாடும் திருகூத்தர் நடராஜ பெருமான்!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Mohan என்பவர் 2020 ஜூன் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா?

கீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்தது என்று எச்.ராஜா பேசுகிற ஒரு வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  காஞ்சி செந்தில் 2.0 என்பவர் இந்த வீடியோ பதிவை செப்டம்பர் 24, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இதில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் ஒரு காட்சியை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’கீழடி பற்றிய உண்மை தெரிஞ்ச […]

Continue Reading

கீழடி மக்கள் வாஸ்து முறையை பின்பற்றியுள்ளனர்: அமர்நாத் ராமகிருஷ்ணன் பெயரில் பரவும் வதந்தி

‘’கீழடியில் வாழ்ந்த மக்கள் வாஸ்து சாஸ்திரம், மத வழிபாடுகொண்டவர்களாக இருந்துள்ளனர்,’’ என்று அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருவதைக் காண நேரிட்டது. இதன் நம்பத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Kumaran R Geddin என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், கீழடி அகழ்வாராய்ச்சியின் கண்காணிப்பாளராக பதவி வகித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாகச் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த சிவலிங்கம்..?” – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!

கீழடியில் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வரலாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கீழடியில் எடுக்கப்பட்ட மண் பானை படம் உள்பட மூன்று படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக […]

Continue Reading

கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’கீழடியில் இருந்து 3000 ஆண்டுகள் பழமையான இயேசு கிறிஸ்து சிலை கண்டுபிடிக்கப்பட்டது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பக்கோடா பாய்ஸ் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை செப்டம்பர் 22 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கீழடி ஆய்வின் 4ம் கட்ட […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த விநாயகர் நாணயம்?” – ஃபேஸ்புக்கில் பரவும் புதிய தகவல்!

கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விநாயகர் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் வடிவிலான ஓடு கண்டுபிடிப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ஆகமம் ஜானகிராமன் என்பவர் 2019 செப்டம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை […]

Continue Reading

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் தகவல்!

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை, தமிழர்களுக்கு என்று தனி அடையாளம் இருந்தது கிடையது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், பொன். ராதாகிருஷ்ணன் புகைப்படம் உள்ளது. அதன் அருகில், கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது […]

Continue Reading