பாஜக நிர்வாகிகள் மது அருந்துவதாகப் பரவும் படம் உண்மையா?

தமிழ்நாடு பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஒன்றாக மது அருந்துவது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link   தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்களின் மேஜை மீது மது பாட்டில்கள் உள்ளது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குடிகாரர்களின் மீட்டிங் […]

Continue Reading

டாஸ்மாக் கடை செல்ல இலவச பஸ் பாஸ் கேட்ட விவசாயி; 2018 செய்தியை தற்போது பரப்பும் நெட்டிசன்கள்!

தி.மு.க ஆட்சியில் ஒருவர் மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று வர தனக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்ததாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினகரன் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “உள்ளூரில் கடை இல்லாததால் டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் […]

Continue Reading

FACT CHECK: மது வாங்குபவர்களுக்கு அரசு மானியம் ரத்து செய்ய வேண்டும் என்று ரத்தன் டாடா கூறினாரா?

மதுவை ஆதார் கார்டு மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் உணவுக்கான மானியங்களை நிறுத்த வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரத்தன் டாடா புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மதுவிற்பனையை ஆதார் கார்ட் மூலமாக விற்பனை செய்ய வேண்டும். மது வாங்குபவர்களுக்கு, அரசு தரும் […]

Continue Reading

மசூதிக்குள் சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள்?- ஃபேஸ்புக் விஷமம்!

கேரளாவில் மசூதிக்குள் கள்ளச்சாராய ஊரல் போட்ட இஸ்லாமியர்கள் கைது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரஷர் குக்கர், பிளாஸ்டிக் டப்பா, அடுப்பு ஆகியவற்றுடன் போலீசார் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளா காஸர்கோட்டில் மசூதிக்குள் கள்ள சாராயம் ஊரல் போட்ட டப்லீசை வெளுத்து வாங்கிய கேரள காக்கிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவைத் தமிழக இந்துக்கள் […]

Continue Reading

இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாட்டில் மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெரியார் பேத்திகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் கையில் மது பாட்டிலுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில் “கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி. பெரியார் பேத்திகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sathya Bala என்பவர் 2020 […]

Continue Reading

வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மதுபாட்டில்களை அழித்தார்களா?

வெளிநாட்டில் மனம் திருந்திய மக்கள் மது பாட்டில்களை அழித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 38 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில், மிகப்பெரிய இடத்தில் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன. நிலைத் தகவலில், “மனம் திருந்திய வெளிநாட்டுவாசிகள் விலை உயர்ந்த பல கோடி மதிப்புள்ள மதுபாட்டில்களை சர்வ சாதாரணமாக […]

Continue Reading

திருட்டுத்தனமாக மதுபாட்டில் வாங்கிய சபரிமலை புகழ் திருப்தி தேசாய்?- ஃபேஸ்புக் வதந்தி

ஊரடங்கு காரணமாக சபரிமலை புகழ், கம்யூனிஸ்ட் ஏஜெண்ட் திருப்தி தேசாய் திருட்டுத் தனமாக மது வாங்கியபோது கைது செய்யப்பட்டார், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 JayaPaul Balu என்பவர் 2020 ஏப்ரல் 2ம் தேதி 1.39 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பெண்மணி ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் […]

Continue Reading