FactCheck: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெண்கள் அணியை எதிர்த்து ஒலிம்பிக்கில் விளையாடும் என்று ராகுல் காந்தி கூறினாரா?

இந்தியா சமூகம் தமிழ்நாடு

இந்திய ஆண்கள் ஹாக்கி மற்றும் பெண்கள் ஹாக்கி அணி இரண்டும் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளதால், இறுதிப் போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியை வெல்லும் என்று ராகுல் காந்தி கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

ராகுல் காந்தி பெயரில் பகிரப்பட்டுள்ள இந்த ட்வீட்டை, +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.

இதன்பேரில் தகவல் தேடியபோது, ட்விட்டரில் பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.

Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
ஆகஸ்ட் 2, 2021 அன்று 10.55 மணியளவில் (காலையா, இரவா என தெரியவில்லை) ராகுல் காந்தி இந்த தகவலை பகிர்ந்திருப்பதாக, சித்தரித்துள்ளனர்.

இதனை வைத்துப் பார்க்கையில் ராகுல் காந்தி இப்படி ட்வீட் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இதன்பேரில், அவரது உண்மையான ட்விட்டர் ஐடி சென்று பார்வையிட்டோம். ஆனால், அப்படி எதுவும் காண கிடைக்கவில்லை.

ஆகஸ்ட் 1, 2021 அன்று இந்திய ஹாக்கி அணி நன்றாக விளையாடியது, என்று பாராட்டி ஒரு ட்வீட் மட்டும் ராகுல் காந்தி வெளியிட்டிருக்கிறார். ஆனால், ஆகஸ்ட் 2, 2021 அன்று அவர் எந்த பதிவும் வெளியிடவில்லை.

தொடர்ந்து, வித விதமான கீவேர்ட் வைத்து தேடுகையில், குறிப்பிட்ட அதே தகவலை, ஆகஸ்ட் 2ம் தேதியில் சிலர் நகைச்சுவைக்காக பகிர்ந்திருப்பதைக் கண்டோம்.

Real Tweet Link 1 I Archived Link 1

Real Tweet Link 2 I Archived Link 2

இதனை அப்படியே எடுத்து, ஐடி பெயர், புகைப்படம், கால நேரத்தை மாற்றி ராகுல் காந்தி பெயரை சேர்த்து வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.

இதேபோல, தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷை கேலி செய்து, இதே தகவலை, அவரது ட்விட்டர் ஐடி, புகைப்படத்தை இணைத்து வதந்தி பகிர்ந்து வருகின்றனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக சேர்த்துள்ளோம்.

FB Post Link

எனவே, ராகுல் காந்தி பெயரை சேர்த்து, எடிட் செய்யப்பட்ட ட்வீட்டை உண்மை போல ஷேர் செய்து வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பெண்கள் அணியை எதிர்த்து ஒலிம்பிக்கில் விளையாடும் என்று ராகுல் காந்தி கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •