‘’தமிழ்நாடு அரசு ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.

FB Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே மக்களை பெரிதும் பாதித்து வரும் சூழலில், தற்போது அதன் புதிய ரகமாக, ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால், இந்திய அளவில் ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேக தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன.

அந்த வரிசையில், தமிழ்நாட்டிலும் தற்போதைய சூழலில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக, சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Dailythanthi News Link I The Indian Express Link

ஆனால், ஜனவரி 20 முதல் மார்ச் 20 வரை முழு ஊரடங்கு என எங்கேயும் இதுவரை தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. அத்துடன், இது தங்களது பெயரில் பரவும் வதந்தி என்று, தந்தி டிவியே மறுத்தும் உள்ளது.

Archived Link

எனவே, தந்தி டிவி பெயரில் பகிரப்படும் மேற்கண்ட செய்தி போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:ஒமிக்ரான்; தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அறிவித்ததா?- தந்தி டிவி பெயரில் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer

Result: Altered