பிரபல சமையல் கலைஞர் CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா? 

உலகச் செய்திகள் | World News சமூக ஊடகம் | Social

‘’பிரபல சமையல் கலைஞர் CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இந்த வீடியோ பதிவில், ‘’ CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, நாம் எப்போதும் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்,‘’ என்று ஒருவர் பேசுகிறார். 

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் CZN புராக். இவரது இயற்பெயர் Burak Özdemir. இவர், சமூக வலைதளங்களில் அன்றாடம் பதிவிடும் சமையல் தொடர்பான வீடியோக்கள் மூலமாக, உலகளவில் புகழ் பெற்றுள்ளார். இது மட்டுமின்றி சமூக சேவைகளும் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் சில மாதம் முன்பாக, மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த பதிவை பார்த்த பலரும் புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலக மக்களை மகிழ்வித்த அவர் மனதில் இவ்வளவு பெரிய சோகத்தை மறைத்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டு தகவல் பகிர தொடங்கியுள்ளனர். 

mmnews.tv link l siasat link  

ஆனால், இது உண்மையல்ல. ஆம், இந்த வதந்தி கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வரும் சூழலில், இதுபற்றி ஏற்கனவே அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்து, பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘’Hello everyone, thank you very much for your good wishes. There is no bad situation. Please don’t rely on unfounded news and shares. Thank you. I am glad to have you. The best bond is love❤️ 🤲,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

எனினும், இன்றளவும் உண்மை விவரம் அறியாமல் சமூக வலைதளங்களில், புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொடர்ச்சியாக வதந்திகள் பகிரப்படுகின்றன. 

இறுதியாக, புராக் இன்றளவும் நல்ல உடல்நலத்துடனே உள்ளார் என்பதற்கு சாட்சியாக, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் (Czn Burak) தினசரி ஏராளமான வீடியோ பதிவுகள் பகிரப்பட்டு வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ செய்தி, தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:பிரபல சமையல் கலைஞர் CZN புராக் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

Written By: Fact Crescendo Team 

Result: False