இந்தியா ஒரு இந்து நாடு என்று முகேஷ் அம்பானி மனைவி ட்வீட் வெளியிட்டாரா?

அரசியல் சமூக ஊடகம்

‘’இந்தியா ஒரு இந்து நாடு என்று முகேஷ் அம்பானி மனைவி ட்வீட் வெளியிட்டார்,’’ எனக் கூறி வைரலாக பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

Mohamad Yakoob என்பவர் கடந்த ஜனவரி 3, 2020 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்தியா இந்துக்களின் நாடு என்று அம்பானி மனைவி ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். எனவே, ஜியோவை பயன்படுத்த வேண்டாம். முஸ்லீம்களே ஜியோவை புறக்கணியுங்கள்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
அம்பானி என்றால், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என சகோதரர்கள் 2 பேர் உள்ளனர். மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் எந்த அம்பானியை குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் வந்தது. ஆனால், ஜியோவை புறக்கணியுங்கள் முஸ்லீம் சொந்தங்களே, என்று கூறியிருப்பதால், இது கண்டிப்பாக, முகேஷ் அம்பானிதான் என்று சந்தேகமின்றி தெளிவானது. அதேபோல, முகேஷ் அம்பானியின் மனைவி என்று நிடாவை சுட்டிக்காட்டுகின்றனர் என தெளிவாகிறது.

இதன்பேரில், நிடா அம்பானி ஏதேனும் ட்விட்டர் (@Nita_Ambani) வெளியிட்டுள்ளாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அவர் அதில் ஆக்டிவ் ஆக இல்லை.

இதையடுத்து, வேறு ஏதேனும் இதுதொடர்பான செய்தி வெளியானதா என விவரம் தேடியபோது, இது பழைய செய்தி என்றும், இதுபற்றி பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன என்றும் தகவல் கிடைத்தது.

அந்த செய்தி லிங்குகளை படித்தபோது, நிடா அம்பானி பெயரில் ஃபேக் ஐடி ஒன்றை யாரோ ஒருவர் தொடங்கி, அடிக்கடி சர்ச்சையான தகவல்களை பகிர்ந்து வந்ததும், பின்னர் அதனை ட்விட்டர் உதவியுடன் நீக்கம் செய்துள்ளனர் எனவும் தெரியவந்தது.

Bhaskar.com Link Factly.in Link Altnews.in Link 

இதுபோன்ற போலி ட்வீட்களின் வரிசையில் ஒன்றுதான், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள நிடா அம்பானி பற்றியதும். இதன் உண்மை புரியாமல் ஏற்கனவே ட்விட்டரில் பலரும் தகவல் பகிர, அது அப்படியே ஃபேஸ்புக்கிலும் வைரலாக பரவி வருகிறது. இதில் ஒரு ட்விட்டர் பதிவை ஆதாரத்திற்காக கீழே இணைத்துள்ளோம். 

Archived Link

மேற்கண்ட பதிவில், Nita Ambani எனக் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக, Nita Amabaani எனக் குறிப்பிட்டு, ஃபேக் ஐடி தொடங்கி, அவரது பெயரில் ட்விட்டரில் போலியான தகவலை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது. இதனை மேற்கோள் காட்டியே, ஃபேஸ்புக்கிலும் பலர் தவறான தகவல் பகிர்ந்து வருகின்றனர்.  

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில், தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் பகிரப்பட்டதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:இந்தியா ஒரு இந்து நாடு என்று முகேஷ் அம்பானி மனைவி ட்வீட் வெளியிட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •