எச்.ராஜாவுக்கு சூடான பதிலடி கொடுத்த ஸ்டாலின்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

குற்றம் சமூக ஊடகம்

இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம் என்று எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்ட் செய்ததாகவும் அதற்கு மு.க.ஸ்டாலின் சூடான பதிலடி கொடுத்ததாகவும் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

H RAJA 2.png

Facebook Link

Archived Link 1 I Archived Link 2

எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்டுக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளது போன்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்டில், “இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம்” என்று உள்ளது. இதற்கு ஸ்டாலின் பதில் அளித்ததாக கூறப்படும் ஃபேஸ்புக் பதிவில், “கட்டின ஒரு பொண்டாட்டியை கூட வச்சு வாழாம தெருவில் விடுபவன் காவி இனம்.

இரண்டு என்ன பத்து பொண்டாட்டி கட்டினாலும் கூட வச்சி வாழும் ஆண்மை உள்ள இனம் திராவிட இனம்” என்று கூறியதாக உள்ளது.

இந்த பதிவை, /Sun News Tamil Live: என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், Mohamed Ibrahim என்பவர் 2019 ஜூன் 20ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று கருதி பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் பதிவிட்டது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், இந்த பதிவு எப்போது வெளியிடப்பட்டது என்ற தகவல் இல்லை.

மேலும், ஃபேஸ்புக் தமிழ் ஃபாண்டும் வித்தியாசமாக இருந்தது. ஃபான்ட் போல்ட் செய்யப்பட்டு இருந்தது. இரண்டு வரிக்கு இடையே மிக நீண்ட இடைவெளி இருந்தது. இதன் மூலம், இது சித்தரிக்கப்பட்ட ஃபேஸ்புக் போஸ்ட் படம் என்பது தெரிந்தது. ஃபேஸ்புக் போஸ்ட் மாதிரி படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

H RAJA 3.png

எச்.ராஜா தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பவர் என்பதாலும் சர்ச்சை எழும்போது எல்லாம் இது நான் போட்ட பதிவு இல்லை, என்னுடைய அனுமதி இன்றி என்னுடைய அட்மின் போட்டுவிட்டார், இது என்னுடைய குரலே இல்லை என்றும் அவர் கூறிவிடுவதால் “இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிடர் கலாச்சாரம்” என்று அவர் எப்போதாவது பதிவிட்டுள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

எச்.ராஜா ஃபேஸ்புக் பக்கத்தில், இரண்டு பொண்டாட்டி தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை அவர் பதிவிட்டிருந்தாரா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு போஸ்டும் நமக்கு கிடைக்கவில்லை.

H RAJA 4.png

ஒருவேளை போஸ்ட் போட்டுவிட்டு, சர்ச்சை காரணமாக அகற்றிவிட்டாரா, இது தொடர்பாக செய்தி ஏதேனும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

H RAJA 5.png

எச்.ராஜா பேசியது குறித்து சமூக ஊடகத்தில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி ஏதும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போன்று பலரும் எச்.ராஜா கூறினார் என்று குறிப்பிட்டு, அதற்கு பதில் அளித்திருந்தது தெரிந்தது.

H RAJA 6.png

இதனால், அவர் அப்படி பேசினாரா இல்லையா என்பதை உறுதி செய்ய தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகி ஒருவரை தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம், “எச்.ராஜா அப்படி எதுவும் பேசவில்லை. சமீபத்தில் அப்படி ஒரு பதிவை வெளியிட்டு, அதை அகற்றியதாக நினைவில்லை. இது தவறான தகவல்” என்றார்.

இதன் மூலம், எச்.ராஜா வெளியிட்டார் என்ற ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று தெரிகிறது. பொய்யான பதிவுக்கு எப்படி மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. இதன் மூலம், ஸ்டாலின் பதிவிட்டது போன்று போலியாக இந்த பதிவு தயார் செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், எச்.ராஜா, மு.க.ஸ்டாலின் பெயரில் வெளியான ஃபேஸ்புக் போஸ்ட் புகைப்படம் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம்” என்று அவர் பேசியது தொடர்பாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அது தொடர்பாக எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பான செய்தி எந்த செய்தி ஊடகங்களிலும் வெளியானதாக நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.

தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் இந்த தகவலை மறுத்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:எச்.ராஜாவுக்கு சூடான பதிலடி கொடுத்த ஸ்டாலின்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •