பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி சார்பாக 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

False சமூக ஊடகம் | Social

‘’2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ INDIA WIN 2025 ICC TROPHY 🏆* 

 2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் ரூ. அனைத்து இந்தியர்களுக்கும் 749.

இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே
https://indwinner1-25.blogspot.com/,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது வேண்டுமென்றே பகிரப்படும் ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, தெரியவந்தது. 

இந்த குறுந்தகவலில் தரப்பட்டுள்ள indwinner2-25.blogspot.como என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து, பார்வையிட்டோம். அப்போது, https://icc.b-cdn.net/ என்ற ஒரு நம்பகத்தன்மையற்ற இணையதள முகவரி ஒன்றுக்கு, Redirect செய்யப்பட்டது. முடிவாக, ‘நீங்கள் தேடும் லிங்க் பயன்பாட்டில் இல்லை’, என்று மட்டுமே பதில் கிடைத்தது. 

இதன்மூலமாக, குறிப்பிட்ட தகவல், ஒரு வதந்தி, என்பது நமக்கு தெளிவாகிறது. 

அடுத்தப்படியாக, இதுபோன்று ICC அல்லது BCCI சார்பாக, இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி 2025 வெற்றியைக் கொண்டாட ஏதேனும் இலவச ரீசார்ஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதா, என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த தகவலும் காணக் கிடைக்கவில்லை.   

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி சார்பாக 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

Written By: Pankaj Iyer  

Result: False