இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது’’, என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது இந்துக்கள் அசைவ உணவு உண்பதால்தான் திருப்பரங்குறத்தில் ஆடு பலியிடுவதை எந்த தாக்கமும் இல்லாமல் கடந்துபோகிறோம் இனி இந்துக்கள் அசைவ உணவு உண்பதையே மத்திய அரசு தடை செய்ய வேண்டும் – ஹெச்.ராஜா கோரிக்கை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3   

புதிய தலைமுறை லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. ‘’கடந்த டிசம்பர் 2, 2024 அன்று நாங்கள் ஹெச். ராஜா பற்றி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை எடுத்து, இவ்வாறு எடிட் செய்து, சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று புதிய தலைமுறை ஊடகத்தின் ஆசிரியர் குழுவினர் நம்மிடம் தெரிவித்தனர். 

Puthiyathalaimurai Link  

உண்மையான நியூஸ் கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாது என்று ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: ALTERED