KGF வில்லன் நடிகர் கருடா ராம் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’KGF மற்றும் பல படங்களில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் கருடா அவர்கள் தூய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டார்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ KGF மற்றும் பல படங்களில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் கருடா அவர்கள் தூய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்று கொண்டார்கள் அல்ஹம்துளில்லா…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், கருடா ராம் முஸ்லீம் போன்று தொப்பி , உடை அணிந்து, சிலருடன் கை குலுக்கி பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வீடியோ உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவல்; இவர்கள் கூறுவது போன்று கருடா ராம் எந்த மதத்திற்கும் மாறவில்லை என்று, தெரியவந்தது. 

சில நாட்கள் முன்பாக, மத நல்லிணக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டு, கருடா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

மேலும், மசூதி ஒன்றுக்குச் சென்று, ரமலான் விருந்தில் பங்கேற்று, பரிசுகள் வழங்கினார். இதன்போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையே சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கருடா ராம் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக, பலரும் தவறான தகவல் பரப்புகின்றனர். 

Link 1 l Link 2  

இதையடுத்து, கருடா ராம் உடனடியாக, மதம் மாறவில்லை, இன்றளவும் இந்து மதத்தில் தொடர்வதாகக் குறிப்பிட்டு, ஊடகங்களில் விளக்கம் அளித்துவிட்டார். 

இது மட்டுமின்றி, கருடா ராம் பங்கேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த மசூதி நிர்வாகமும் உரிய விளக்கம் அளித்துள்ளது. அதில், கருடா ராம் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை, என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர்

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கருடா ராம் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:KGF வில்லன் நடிகர் கருடா ராம் இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False