
‘’ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் லயோலா மணி போட்டி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ வேட்பாளர் அறிவிப்பு! ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளராக லயோலா மணி அறிவிப்பு’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவெக பெயரில் பரவும் போலியான செய்தி என தெரியவந்தது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் (முன்னாள் எம்எல்ஏ) இறந்த காரணத்தால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. இதன்பேரில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
New Indian Express l Times of India
இதையடுத்து, பல்வேறு கட்சிகளும் வேட்பாளரை அறிவிக்கலாமா, வேண்டாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக.,) கட்சி சார்பாக, ‘ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளராக லயோலா மணி அறிவிப்பு’ என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
ஆனால், இது வதந்தி என்று லயோலா மணி தனது X வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக, மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு; அதற்கு முன்பாக எந்த தேர்தலிலும் தவெக., போட்டியிடாது என்று ஏற்கனவே நடிகர் விஜய் திட்டவட்டமாகக் கூறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி, தவறான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் லயோலா மணி போட்டியிடுகிறாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
