கருக்கலைப்புக்குச் சலுகை இல்லை என்று சீமான் ஆதங்கப்பட்டாரா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

கருக்கலைக்க காரணமான ஆண்களுக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாலிமர் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கவர்ச்சி அறிவிப்புகளுடன் கூடிய வெற்று அறிக்கை. பட்ஜெட்டில் கருக்கலைக்கக் காரணமான ஆண்களுக்கு எந்த சலுகையும் இல்லை இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா? நான்காண்டுகளில் செய்யாததை மீதமிருக்கும் ஓராண்டில் தி.மு.க அரசு செய்யும் என்பதை எப்படி நம்ப முடியும் என கேள்வி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் திரைப்பட நடிகை ஒருவருக்கும் முன்பு தொடர்பு இருந்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த தொடர்பு காரணமாக அந்த நடிகை பல முறை கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் கருக்கலைப்புக்கு காரணமான ஆண்களுக்கு சலுகை இல்லை என்று சீமான் கருத்து தெரிவித்துப் போன்று நியூஸ் கார்டு ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு கருத்தை சீமான் கூறியிருக்க வாய்ப்பில்லை. மேலும், நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமான பாலிமர் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது தெளிவாகிறது. இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.

Archive

முதலில் பாலிமர் டிவி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டை தேடி எடுத்தோம். அதில், “தமிழக பட்ஜெட், கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை என சீமான் விமர்சனம்” என்று இருந்தது. இதை எடிட் செய்து சீமான் கூறாத விஷயத்தைச் சேர்த்திருப்பது தெளிவானது. அடுத்ததாக சீமான் அளித்த பேட்டியையும் தேடி எடுத்தோம். அதையும் முழுவதுமாக பார்த்தோம். அதில் அவர் கருக்கலைப்புக்குச் சலுகை என்றெல்லாம் கூறவில்லை. எனவே, இந்த தகவல் தவறானது என்பது உறுதியானது.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய, இதை பாலிமர் டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினோம். அவரும் “இந்த நியூஸ் கார்டு போலியானது, பாலிமர் செய்திகள் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்துள்ளனர். இது தவறானது” என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

பட்ஜெட்டில் கருக்கலைக்க காரணமான ஆண்களுக்கு சலுகை இல்லை என்று சீமான் ஆதாங்கப்பட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கருக்கலைப்புக்குச் சலுகை இல்லை என்று சீமான் ஆதங்கப்பட்டாரா?

Written By: Chendur Pandian  

Result: False