
‘’இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்’’, என்று காவ்யா மாறன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ உங்கள் கருத்து என்ன?
இப்போது பெரியார் இருந்திருந்தால் நான் அவரை திருமணம் செய்திருப்பேன் *காவ்யா மாறன்*.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது சன் நியூஸ் பெயரில் பரவும் போலியான ஒன்று என, தெரியவந்தது.
கடந்த 10 Feb 2025 அன்று இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாக, அதில் தேதி குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த நாளில் சன் நியூஸ் வெளியிட்ட டெம்ப்ளேட் வெறொன்றாக உள்ளது.
இதுதொடர்பாக, சன் நியூஸ் ஆசிரியர் குழு தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், இதுபோன்ற எந்த செய்தியும் இதுவரை சன் நியூஸ் வெளியிடவில்லை.
உண்மையான நியூஸ் கார்டையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:பெரியாரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தாரா காவ்யா மாறன்?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
