
‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப் பதிவு நடைபெற்ற வேளையில், அதற்கு முன்பாக, திடீரென மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பலவிதமான வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. நாமும், இதுபற்றி உண்மை கண்டறிந்து செய்திகளும் வெளியிட்டிருக்கிறோம்.
இந்த சூழலில் பகிரப்பட்டு வரும் மற்றொரு வதந்திதான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும்.
ஆனால், அதில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்திற்கும், மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் ஆகியோருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனெனில், இந்த புகைப்படம், 2019ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம், கம்மம் போலீசார், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கமிஷன் பெற்றுக் கொண்டு சிலர் ரூ.2000 நோட்டாக மாற்றி வருவதைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தபோது எடுக்கப்பட்டதாகும். அதுபற்றி தெலுங்கானா போலீசாரே ஊடகங்களில் அப்போதே விளக்கம் அளித்துள்ளனர்.
எனவே, 2019ம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தமிழ்நாடு அரசியல் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா?- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False
