பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி?

பீகாரில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 3 பேரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி என்ற பெயரில், சில வைரல் ஃபேஸ்புக் செய்திகளை காண நேரிட்டது. ஒரே செய்தியை, இரு வேறு புகைப்படங்களை வைத்து பகிர்ந்திருந்தனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன. தகவலின் விவரம்:பிஹாரில் 8 வயது சிறுமியை கற்பழித்த கொடூரர்கள் மூவரின் ஆணுறுப்பில் சுட்ட போலீஸ் அதிகாரி.மனம் இருந்தால் லைக் & ஷேர் பண்ணி […]

Continue Reading

வெள்ள சேதத்தை பார்வையிட வந்த இடத்தில் சமோசா சாப்பிட்ட ராகுல்! – வைரல் வீடியோ உண்மையா?

வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற ராகுல் காந்தி, சமோசாவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: வெள்ளம் பாதித்த பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பார்வையிடும் வருங்கால இத்தாலிய பிரதமர்…என்னே ஒரு அக்கறை சமோசா மேல… Archived link ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அருகில் ஒரு கவரில் இருந்து சமோசாவை எடுத்து அருகில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பவர் என அனைவருக்கும் […]

Continue Reading

ஆட்டோ, டாக்ஸியில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு தனி நம்பர்? – பரவும் வதந்தி

‘சென்னை நகரில் ஆட்டோ, டாக்ஸியில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு, வண்டியின் நம்பரை எஸ்.எம்.எஸ் செய்தால், வாகனம் பயணிக்கும் பாதையை சென்னை மாநகர காவல் கண்காணிக்கும்,’ என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தமிழ்நாடு காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு போல இருக்கும் இந்த பதிவில், “பெண்களின் பாதுகாப்புக்காக சென்னை மாநகர காவல் ஆணையரகம் புதிய ஹெல்ப் லைனை உருவாக்கி உள்ளது. […]

Continue Reading

ராகுல் காந்தி இத்தாலியில் வாங்கிய அடுக்கு மாடி கட்டிடம்: செய்தி உண்மையா?

‘’ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள்,’’ என்ற தலைப்பில் வைரல் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்தியாவில் கொள்ளையடித்து ராஜீவ்காந்தி மகன் பப்பு ராகுல் வின்சி இத்தாலியில் வாங்கி வைத்திருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களை பாருங்கள் பிரமித்து போய்விடுவீர்கள் இவர்கள் உண்மையான கொள்ளைக்கூட்டங்கள் மக்களே உணர்ந்து கொள்ள வேண்டும் Archived Link ஏப்ரல் 29ம் தேதி […]

Continue Reading