ராணுவ தேர்வு கேள்வித்தாளை திருடி விற்ற 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது?

‘’ராணுவத் தேர்வு கேள்வித்தாள் திருடிய 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது‘’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு செய்திப் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’இந்திய இராணுவத் தேர்விலும் ஊழல்! இந்திய இராணுவத் தேர்வுக்கான கேள்வித்தாளை திருடி 10 கோடிக்கு விற்றதாக மராட்டியம் மற்றும் கோவாவைச் சேர்ந்த 18 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தானே மாநகர […]

Continue Reading

இம்போர்டட் வீல்சேர் இலவசமாக வழங்கப்படுகிறதா? – வதந்தியால் விபரீதம்!

மத்திய அரசின் நிப்மெட் நிறுவனத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வீல் சேரை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது என்று ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்… தகவலின் விவரம்: 40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்… வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம். இட‌ம் : […]

Continue Reading

பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்: ஃபேஸ்புக் வைரல் செய்தி

‘’மத்தியப் பிரதேச பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோ செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்தோம். விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பேட்டி தர, வீடியோவில் பாஜக பிரமுகர் ஒருவரையும், ஆயுதங்கள் பலவற்றையும் காட்டுகிறார்கள். இதுவரை 19 ஆயிரம் பேர் […]

Continue Reading

ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாரா?

“ரஃபேல் போர் விமானம் விவகாரத்தில் நான் பொய் சொன்னேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ராகுல் காந்தி கண்ணடிக்கும் படத்துக்கு அருகே, மன்னித்து விடுங்கள் என்று மிகப்பெரிய தலைப்பிட்டுள்ளனர். அதில், “ரஃபேல் விவகாரத்தில் நான் பொய் தான் சொன்னேன். தேர்தல் பிரசார வேகத்தில் அப்படி பேசினேன். அதற்காக மன்னிப்பு […]

Continue Reading

இலங்கை மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ?- உண்மை அறிவோம்

‘’இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ‘நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்’ – இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ#SriLankaAttacks #SuicideBombers #ViralVideo ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிலர் துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு, தங்களது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருக்க, உணர்ச்சிவசமாகப் பேசுகிறார்கள். […]

Continue Reading

மோடிக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்?

‘’சொந்த செலவில் வெளிநாடுகளில் இருந்து மோடிஜிக்கு வாக்கு அளிக்க வந்த நம்முடைய சொந்தங்கள் என்று,’’ ஒரு புகைப்படம் சமூக ஊடகத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link எஸ்கலேட்டரில் ஏராளமானவர்கள் பா.ஜ.க காவி நிற டி-ஷர்ட் அணிந்து செல்கின்றனர். சிலர் ‘மோடி ஒன்ஸ் மோர்’ என்ற வாசகம் இடம் பெற்ற டி-ஷர்ட் அணிந்துள்ளனர். அந்த இடம் பார்க்க ஷாப்பிங் மால் போல இருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளில் […]

Continue Reading

ஒருவர் விபத்தில் இறந்தால் அரசு 10 மடங்கு நஷ்ட ஈடு தர வேண்டும்: உண்மை என்ன?

‘’ஒருவர் விபத்தில் உயிரிழந்தால், அவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், மோட்டார் வாகன பாதுகாப்புச் சட்டப்படி, அவருடைய வருட வருமான அடிப்படையில் 10 மடங்கு பணத்தை அரசு வழங்க வேண்டும்,’’ என்ற ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 28ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு நல்ல செய்தி பகிரலாமே எனக் கூறி, ஒருவர் விபத்தில் இறந்தால்… அவர் தொடர்ந்து […]

Continue Reading

எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதி வந்த மு.க.ஸ்டாலின்? – வைரல் புகைப்படம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, வாக்களிக்கச் சென்ற மு.க.ஸ்டாலின், எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று எழுதிவைத்து வந்ததாக ஒரு படம் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்… தகவலின் விவரம்: துண்டு சீட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமாட Archived link மு.க.ஸ்டாலின் கையில் ஒரு அட்டை உள்ளது. அதில், ஏதோ எழுதப்பட்டது போல காட்டியுள்ளனர். அதை பெரிதாக்கி காட்டியதுபோன்று மற்றொரு புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஓட்டுப் போட 2ம் பொத்தானை […]

Continue Reading

சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘’சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது,’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:சசிகலா குடும்பத்தினரை பார்த்ததே கிடையாது: எடப்பாடி பழனிச்சாமிஇது உலக மகா நடிப்புடா சாமி.. Archived Link Political Press Attitude என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரையிலும் 1.64 லட்சம் பேர் ஷேர் […]

Continue Reading

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் கடல் நீர் பொங்கும் கோவிலா?

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் சிவன் என்று ஒரு கடலோர சிவ லிங்க வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. நேபாளம் நாட்டை ஒட்டி கடல் எதுவும் இல்லையே, இது என்ன புது கதையாக இருக்கிறது என்று அந்த வீடியோவை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link ‘’காத்மாண்டு பசுபதிநாத் கோவிலுக்கு செல்வதே கடினம்… அதைவிடக் கடினம் சிவனை படம் எடுப்பது’’ என்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில், கடல் அலைகள் வந்து […]

Continue Reading

வெவ்வேறு ஷூ அணிந்து ஓடினாரா கோமதி மாரிமுத்து?

‘’2 வெவ்வேறு காலணிகளை அணிந்து ஓடிய கோமதி,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த முடிவுகளை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன், கோமதி மாரிமுத்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வீடியோவையும் ஆதாரமாக இணைத்து தமிழ் தேசியம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதே செய்தியை வைத்து […]

Continue Reading

ஒருவேளைக்கு 432 வகை உணவுகளை சாப்பிடும் மோடி?

பிரதமர் மோடி மேசையில் குவிக்கப்பட்ட உணவு வகைகளை ருசி பார்ப்பது போன்ற படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனுடன் 432 வகை உணவுகளை சாப்பிடும் ஏழைத்தாயின் மகன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: அம்மாவும், மகனும் பேசிக் கொண்டது. அம்மா ; டேய் மகனே நீ பலைய கஞ்சியும் மிலகாயும் சாப்ட தால ஏழை தாயின் மகனாக ஆகிவிட முடியாது. நம்ம நாட்டு மக்கலோட காசுல 432 […]

Continue Reading

தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள்: வைரல் செய்தியால் பரபரப்பு

‘’தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை அகற்றிவிட்டு இந்தியில் கல்வெட்டு பதிக்கிறார்கள்,’’ என்று கூறி, ஒரு வீடியோவும், அதுதொடர்பான பதிவுகளும் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன. உண்மையில் அப்படி ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதைக் கண்டும் காணாது இருக்கும் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகமும்,தமிழக அரசும் . இனியும் தமிழன் அமைதி காத்தால் உன் பெருமைமிகு வரலாறும் கல்வெட்டும் காற்றோடு கரைந்து போகும். […]

Continue Reading

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம்: மும்பை பங்குச்சந்தை செய்தி உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் என, மும்பை பங்குச்சந்தை வாரியம் கூறியதாக, ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Archived Link கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மும்பை பங்குச்சந்தை வாரியமான BSE, பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டாம் எனக் கூறி, டிராக்கர் ஓட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக, புகைப்படம் […]

Continue Reading

அபுதாபி இளவரசர் பிரம்மாண்ட இந்து கோவிலை கட்டினாரா?

‘’அபுதாபி இளவரசர் தன்னுடைய சொந்த செலவில் அபுதாபியில் நாராயணன் திருக்கோயிலை கட்டியுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் அபுதாபி இளவரசர் தன் சொந்த செலவில் கட்டியுள்ள நாராயணன் தி௫க்கோவில். அபுதாபில் கட்டியுள்ளார் Archived link இந்த ஃபேஸ்புக் பதிவில், மிக பிரம்மாண்ட அழகிய கோவில் படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இது அபுதாபியில் உள்ளது என்றும், இதை அபுதாபி இளவரசர் தன்னுடைய சொந்த […]

Continue Reading

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு குற்றவாளியா சாத்வி பிரக்யா?

‘’அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதி சாத்வி பிரக்யாவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சாத்வியை போலீசார் அழைத்து வரும் படத்தின் மீது, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங்குக்கு போபாலில் போட்டியிட பா.ஜ.க சீட் வழங்கியுள்ளது. தீவிரவாதிக்கு எம்.பி சீட் … இவங்கதான் தீவிரவாதத்தை ஒழிக்குறவங்க பார்த்துக்கோங்க மக்களே […]

Continue Reading

அய்யாக்கண்ணுவை டெல்லியில் போராடத் தூண்டியது திமுக, காங்கிரஸ் கட்சிகளா?

தங்களை டெல்லியில் போராடத் தூண்டியதே தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ? விதி விளையாடுது . ?? Archived link மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராட இயக்கியதே தி.மு.க, காங்கிரஸ்தான் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சி நியூஸ் […]

Continue Reading

திமுக.,விற்கு ட்விட்டர் நிறுவனம் பணம் கொடுத்ததாக பரவும் வதந்தி!

‘’திமுகவுக்கு பணம் கொடுத்ததாக டிவிட்டர் நிறுவனம் ஒப்புதல்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல ஒன்றை பகிர்ந்து, ‘GoBackModi என்ற பெயரில் பதிவு போடுவதற்காக, […]

Continue Reading

கள்ள ஓட்டு போடுவதற்காக கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்?

‘’கள்ள ஓட்டுப் போடுவதற்காகக் கையை வெட்டிக் கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. அந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். செய்தியின் விவரம்:கள்ள ஓட்டு போட மையை கத்தியால் சுரண்டியபோது விரலை வெட்டிக்கொண்ட பகுஜன் சமாஜ் தொண்டர். Archived Link ஏப்ரல் 19ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் பலரும் […]

Continue Reading

ஆரணி சிறுவன் ஜீவசமாதி அடைந்தது உண்மையா? அதிர்ச்சி லைவ் வீடியோ

13 வயது சிறுவன் ஒருவன் ஜீவ சமாதி அடைந்ததாக சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை பார்த்துள்ளனர். உண்மையில் சிறுவன் உயிருடன் ஜீவசமாதி செய்யப்பட்டது உண்மையா என்று ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: ???முகநூல் நண்பர்களே 13 வயது சிறுவன் ஜீவசமாதி மிக அருமையான காட்சி நேரடி ஒளிபரப்பாக இந்த வீடியோ எடுக்கப்பட்டது அன்பு நண்பர்கள் அனைவரும் இந்த சித்தர்கள் பற்றிய பார்த்துமகிழுங்கள் ஜீவசமாதி ஆனால் நாள் 16.04. […]

Continue Reading

பாஜக.,வுக்கு வாக்களிக்கச் சொன்னாரா அபிநந்தன்?

‘’பாஜக.,வின் சதி அம்பலம்,’’; ‘’பாஜக.,வுக்கு பிரசாரம் செய்யும் அபிநந்தன்,’’ போன்ற தலைப்புகளில் ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் விங் கமாண்டர் அபிநந்தனா என்ற சந்தேகத்தில் நாம் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரம் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்:சீமான் கூறுவது போல், பாஜக வின் திட்டமிட்ட சதி அம்பலம் – இவர் யார் என்று தெரிகிறதா? Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவை கடந்த ஏப்ரல் 13ம் […]

Continue Reading

வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் சென்ற விவகாரத்தில் மேலும் மூன்று பேர் சஸ்பெண்ட்?

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் சென்ற பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடன் சென்ற மூன்று அரசு ஊழியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு ஊழியர் குற்றங்கள் என்ற ஃபேஸ்புக் குழு பதிவிட்டுள்ளது. இந்து தமிழ் நாளிதழில் இருந்து, இச்செய்தி எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்! […]

Continue Reading

தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்: நிதின் கட்கரி பேசியது உண்மையா?

‘’தமிழர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள்- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை உண்மை என நம்பி பலரும் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஏப்ரல் 15ம் தேதி பகிரப்பட்டுள்ளது. இதனை எம்பெட் செய்யக்கூட முடியாதபடி செட்டிங்ஸ் வசதியை மாற்றியமைத்துள்ளனர். அவ்வளவு கவனமாக இருப்பவர் வெளியிடும் தகவலையும் […]

Continue Reading

இலங்கையில் அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் கண்டுபிடிக்கப்பட்டதா?

இலங்கையில் அகழ்வாராய்ச்சியின்போது அனுமான் பயன்படுத்திய மிகப்பெரிய கதாயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகத்தில் படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் பயன்படுத்திய கதாயுதம் இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதைத் தூக்கவே இரண்டு கிரேன் இயந்திரம் தேவைப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். கடைசியில் ஜெய் அனுமான் போற்றி என்று முடித்துள்ளனர். இலங்கையில் எந்த இடத்தில், எப்போது கிடைத்ததென கூறப்படவில்லை. படத்தில் […]

Continue Reading

பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அத்வானி சொன்னாரா?

‘’பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம்; நாட்டை விற்றுவிடுவார்கள்: அத்வானி உருக்கம்,’’ என்ற தலைப்பில் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்:தயவு செய்து பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம் ……. நாட்டை விற்று விடுவார்கள் .#அத்வானி_உருக்கம்….. Archived Link இதில், அத்வானியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் கூறியதாகச் சில வார்த்தைகளை எழுதியுள்ளனர். ஆனால், இதற்கான ஆதார செய்தி அல்லது வீடியோ இணைப்பு […]

Continue Reading

வாக்குப் பதிவு பெட்டி இருந்த மையத்துக்கு சென்ற தாசில்தார் – எதிர்க்கட்சிகள் புகார் உண்மையா?

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தாசில்தார் சென்றது தொடர்பாகவும் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் கூறி ஃபேஸ்புக்கில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மதுரை நாடாளுமன்றத் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைத்திருக்கும் மையத்திற்குள் அத்துமீறி நுழைவு Archived link மதுரை நாடாளுமன்ற தொகுதியில் […]

Continue Reading

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை உண்மையா?

‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என #என்தளபதி அவர்கள் அறிக்கை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. அந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது கழக நிர்வாகிகளும் – கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும்– தி.மு.க தலைவர் #என்தளபதி அவர்கள் அறிக்கை … Archived Link இந்த பதிவு […]

Continue Reading

மின்னணு வாக்குப் பதிவு முறையை கைவிட வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துவிட்டன, இந்தியாவும் கைவிட வேண்டும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 21ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கும், வாக்குச் சீட்டு முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், வட இந்தியாவில் ஒருவர் கள்ள ஓட்டு போட்டது பற்றியும் பல்வேறு விசயங்களை குறிப்பிட்டுள்ளனர். இது […]

Continue Reading

எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? – விஷம செய்தி வெளியிட்ட இணையதளம்!

‘’பின்னால் கை வைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?,’’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால், குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டது போன்று தலைப்பு இருந்தது. எனவே, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? Archived link குஷ்பு சுந்தர் ஒருவர் கன்னத்தில் அறையும் படம் மற்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி […]

Continue Reading

இரண்டே நிமிடத்தில் பல் வெள்ளையாகுமா? – வைரல் வீடியோ

‘’இரண்டே நிமிடத்தில் கறை படிந்த பற்கள் வெள்ளையாக பளபளப்பாகிவிடும்,’’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: 2 நிமிடங்களில் கறை படிந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக பளபளப்பாக்கி விடும் Archived link மஞ்சள் கறை படிந்த பற்கள், அதற்கு கீழே வெண்மையான பளீச் பற்கள் ஆகிய புகைப்படங்களை ஒன்றாக இணைத்துக் காட்டியுள்ளனர். பக்கத்தில், உப்பு, இஞ்சியை வைத்துள்ளனர். 2 நிமிடத்தில் கறை […]

Continue Reading

காமராஜரை அடக்கம் செய்ய கருணாநிதி இடம் தரவில்லை: உண்மை என்ன?

‘’முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்தபோது, அவருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்றையும், காமராஜர் இறந்தபோது கருணாநிதி பார்வையிட்ட புகைப்படம் ஒன்றையும் சேர்த்து மீம் […]

Continue Reading

ஓட்டுக்குப் பணம் கொடுத்தாரா எடப்பாடி பழனிசாமி? – உண்மை அறிவோம்!

சேலத்தில் பெண்மணி ஒருவருக்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: முதல்வரே ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்..! வாழ்க ஜனநாயகம்…! வாழ்க தேர்தல் ஆணையம்..! Archived link வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழம் விற்பனை செய்யும் பெண்மணி ஒருவருக்கு பணம் கொடுக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. பின்னால் […]

Continue Reading

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டுப் போட தமிழகம் வந்தாரா?

‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் வந்தார் #Google_CEO சுந்தர் பிச்சை ? ?? #சர்க்கார் மகிமையோ மகிமை ?ஒரு வாக்கின் முக்கியத்துவம் ☒ lol ?? Archived Link ஏப்ரல் 18ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், ‘’ஓட்டுப் போடுவதற்காக தமிழகம் […]

Continue Reading

அதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு?- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்!

‘’அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டுப் போட போகின்றீர்கள்,’’ என பிரேமலதா பேசியதாகக் கூறி, ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. பிரேமலதா சார்ந்துள்ள தேமுதிக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில், அவர் பற்றி கூறப்படும் இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: பொதுக்கூட்டத்தில் பிரேமலதா ஆவேசம்! அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டு போட போகின்றீர்கள்? Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையிலும், […]

Continue Reading

தோல்வி பயம் காரணமாக தர்காவுக்கு சென்றாரா மோடி?

‘’தோல்வி பயம் துரத்தவே பிரதமர் மோடியும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தர்காவுக்கு சென்றனர்,’’ என்று ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தோல்வி பயம் துரத்த தர்காவுக்குள் புகுந்த மோடி & யோகி சங்கிகள் பாணியில் சொல்வதானால் பாகிஸ்தான் கொடிக்கு மரியாதை செலுத்திய மோடி Archived link இந்த பதிவில், பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில், பிரதமர் மோடி பச்சை நிற போர்வை போர்த்தப்பட்ட சமாதி […]

Continue Reading

தமிழக வாக்காளர்களை ‘பிச்சைக்காரர்கள்’ என்று ஓ.பி.எஸ் கூறியது உண்மையா?

“பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது” என்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக, தந்தி தொலைக்காட்சி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: ஓபிஎஸ்சின் திமிர் பிடிச்ச இன்றைய அறிக்கை Archived link ஏப்ரல் 14ம் தேதி தந்தி தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் கார்டில், ஓ.பன்னீர்செல்வம் புகைப்படத்துடன் செய்தி உள்ளது. இதில், “பணத்திற்காக வாக்கை விற்கும் பிச்சைக்காரர்கள் உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது. […]

Continue Reading

சவூதி அரசர் சல்மான் காலில் விழுந்தாரா மோடி?

சவூதி அரசர் சல்மான் காலில் மோடி விழுந்து வணங்கியதாகக் கூறி ஒரு புகைப்படம் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பார்ப்பதற்கு, நம்பும்படியாக இல்லை என்பதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: Archived Link இதில், பிரதமர் மோடி, சவூதி அரசர் சல்மானின் காலில் விழுந்து ஆசிபெறுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டு, அதன் மேலே ,இந்தியாவின் அனைத்து கேவலப்பட்ட ஊடகங்களும் மறைத்த புகைப்படம்…!! என எழுதியுள்ளனர். இதனை வேறு ஒருவர் பகிர்ந்த நிலையில், […]

Continue Reading

பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து பணம் பறிமுதல்?

‘’பாஜக எம்எல்ஏ சுதிர் காட்கில் காரில் இருந்து ரூ.20,000 கோடி பணம் பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஃபேஸ்புக்கில் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்:பாஜக MLA சுதிர் காட்கில்.இவரது காரிலிருந்து 20,000 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பிடிபட்டு உள்ளது.இது பற்றி எந்த செய்தி ஊடகங்களும் வாய் திறக்கவில்லை. சமூக வலைதளங்கள்மூலமே பகிர வேண்டும் Archived Link […]

Continue Reading

நான் தோற்றால் அதற்கு காரணம் பா.ஜ.க கூட்டணிதான்: தம்பிதுரை பேசியது உண்மையா?

‘’நான் கரூரில் தோற்றால் அதற்கு பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததே காரணமாக இருக்கும்,’’ – என தம்பிதுரை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: கரூர் மக்களவை தொகுதி ADMK வேட்பாளர் திரு M. தம்பித்துரை அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் நன்றி. Archived link “நான் கரூரில் தோற்றால் அதற்கு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததே காரணமாக இருக்கும்” என்று மக்களவை துணை […]

Continue Reading

காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என ராகுல் சொன்னாரா?

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று ராகுல் காந்தி பேசியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: தமிழக காங்கிரஸ் கட்சி வாய் திறந்து சொல்லவேண்டும் மக்களுக்கு கட்சியின் நிலைப்பாடு என்ன ௭ன்று. Archived link பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், காவிரி ஆணையம் கலைக்கப்படும் என்று பேசியதாக […]

Continue Reading

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுப் போட முடியும்: வாட்ஸ்ஆப் வதந்தி

‘’வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை காட்டி நீங்கள் ஓட்டுப் போட முடியும்,’’ என வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் தகவல் பகிரப்பட்டிருந்தது. இதனை உண்மை என நம்பி பலரும் ஃபார்வேர்ட் செய்து வருவதால், இந்த தகவல் பற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:‘’பொதுமக்கள் நலன் கருதியும், ஜனநாயகம் காப்பாற்றவும் ஒரு முக்கிய தகவல். நீங்கள் வாக்குச்சாவடி சென்று, அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது […]

Continue Reading

இந்துக்களின் ஓட்டு பெறும் அளவுக்கு தி.மு.க தரம் தாழ்ந்துவிடவில்லை என்றாரா மு.க.ஸ்டாலின்?

இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றிபெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம் நீங்க சொன்னதுக்கு பிறகு நாங்க ஓட்டு போட்டா ! நாங்க மனுசனே இல்லை !! Archived link இந்துக்கள் வாக்களித்துத்தான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குபெறும் அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தரம் […]

Continue Reading

ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை: உண்மை என்ன?

‘’ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும்,’’ என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு வைரல் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:சுற்றி வளைத்து எங்கே போய் நிற்கிறானுகன்னு தெரியுதா? ரேஷன் கடைகளை மூடப்போறதா தேர்தல் அறிக்கையில் சொல்லியாச்சி. மக்களுக்குத் தேவையான பொருட்களை அந்த ஃப்ராடு சன்னியாசி நிறுவனம்தான் டோர் டெலிவரி செய்யப்போகுதாம்.. சிந்தித்து வாக்களியுங்கள் Archived Link பாஜக தேர்தல் அறிக்கை 2019 என பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் […]

Continue Reading

எச்.வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடியா?

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றி உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தினோம். தகவலின் விவரம்: வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி வாழ்க உம் நாட்டப்பற்று Archived link கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று எச்.வசந்தகுமார் வாக்கு கேட்கும் படத்தை வெளியிட்டு, அதில். ‘’வசந்தகுமார் வாகனத்தில் பாகிஸ்தான் கொடி… வாழ்க உன் நாட்டுப்பற்று,’’ என்று நிலைத்தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில், பச்சை […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும்: சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை- பிபிசி செய்தி உண்மையா?

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியே 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் ஃபார்வேர்ட் மெசேஜை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்:‘’2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று, ஆட்சியமைக்கும் என சிஐஏ, கேஜிபி, மொசாட் சர்வே நடத்தி […]

Continue Reading

பலாத்காரம் செய்ய முயன்றவர்களை கொன்ற பெண்ணுக்கு சிறையா?- பரிதாபத்தை சம்பாதிக்கும் பதிவு!

‘’பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற இரண்டு பேரை கொலை செய்த பெண்ணுக்கு அரசு கொடுத்த பரிசு சிறை தண்டனை,’’ என்ற தலைப்பில் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: தன்னை கற்பழிக்க முயன்ற இருவரை கொன்றுவிட்டாள் இந்த வீரப்பெண்..!!!கிடைத்த பரிசு கைது!!! இந்த பெண் செய்தது #சரியா_தவறா.? சரிதான் என்றால் பகிருங்கள் Archived link தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்த இருவரை இந்த […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணை மானபங்கம் செய்த எம்எல்ஏ!

‘’உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், பொதுமக்கள் முன்னிலையில் ஏழைப்பெண்ணை மானபங்கம் செய்யும் எம்எல்ஏ,’’ என்ற தலைப்பில், ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதுவரை 47,000 பேர் ஷேர் செய்துள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். தகவலின் விவரம்: எவன்டா இந்த நாய் Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2018, நவம்பர் 8ம் தேதியன்று இந்த பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இது வேறொருவர் பகிர்ந்த பதிவை எடிட் செய்ததாகும். அதற்கு சாட்சியாக, இந்த பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தின் […]

Continue Reading

செக்ஸ் வீடியோவில் அ.ம.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிக்கினாரா?

தேனி மக்களவைக்கு அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் செக்ஸ் வீடியோவில் சிக்கியதாக ஒன் இந்தியாவின் tamil.gizbot.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வனும் சிக்கிவிட்டார் என்று நினைத்து சமூகவலைத்தளங்களில் இந்த செய்தி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: பெண்மிரட்டி பலாத்காரம்: செக்ஸ் வீடியோவில் சிக்கிய 2 அமமுக வேட்பாளர்! Archived link Archived link அ.தி.மு.க-வின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் […]

Continue Reading

மோடி புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்தாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்ததாகக்கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: அடப்பாவி அம்மா ஆவி உன்ன சும்மா விடாது Archived Link ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்பட்ட பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின், புகைப்படத்தை பகிர்ந்து, அவரது சட்டை பாக்கெட்டில், பிரதமர் மோடியின் புகைப்படம் […]

Continue Reading

மாட்டிறைச்சி விவகாரம்: அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு விதித்துள்ள தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் வைரல் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை அறிய முடிவு செய்தோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: அவமானபட்டான் மொட்டையன் Archived Link இந்த பதிவில், யோகி ஆதித்யநாத் புகைப்படம் மற்றும் பெண் ஒருவரின் பாதங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன்மீது, ‘’அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு, உபியில் மாட்டிறைச்சி தடை உத்தரவை 10 […]

Continue Reading