பெண்ணுடன் நடனமாடிய மகாத்மா காந்தி புகைப்படம்… உண்மையா?

மகாத்மா காந்தி, பெண் ஒருவருடன் நடனம் ஆடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link காந்தியடிகள் போல உள்ள ஒருவர் வெளிநாட்டு பெண்மணி ஒருவருடன் நடனமாடுகிறார். அதன் கீழ், “MAHATMA STEPS OUT of character as Gandhi” என்ற வார்த்தைகள் உள்ளன. எங்கோ, புத்தகத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுத்திருப்பது தெரிந்தது. ஆனால், புகைப்படம் பற்றிய குறிப்பு நீக்கப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

மோடியின் தியானம்- குகையே இல்லையாம்… குழப்பும் ஒன் இந்தியா செய்தி!

‘’மோடியின் தியானம்- குகையே இல்லையாம்… அரசின் குகை மாடல் கெஸ்ட் ஹவுஸாம்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இதே செய்தியை, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திலும் விரிவாக வெளியிட்டுள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link இந்த செய்தி மே 19ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.  உண்மை அறிவோம்: ஒன் இந்தியா செய்தியில் குறிப்பிட்டுள்ளது […]

Continue Reading

காமராஜ் 1975ம் ஆண்டில் உயிரிழந்தார்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

காமராஜ் காலமானார், என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Sutralam Suvaikalam என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், தினமணி நாளிதழின் பழைய செய்தியை புகைப்படமாக எடுத்து, பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். உண்மை அறிவோம்:கடந்த 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர் கே.காமராஜ். இந்திய தேசிய காங்கிரஸ் […]

Continue Reading

நக்கீரன் கோபாலை சிதறடிக்கும் சின்மயி: குழப்பம் தரும் ஏசியாநெட் செய்தி!

“வைரமுத்து இப்படி தடவினாரா… அப்படி ஒரசினாரா?” என்று பாடகி சின்மயி நக்கீரன் கோபாலிடம் கேள்வி கேட்டது போன்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்தது. தலைப்பே குழப்பமாக இருக்க அது என்ன என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link 1 Archived link 2 ஏஷியாநெட் தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 மே 21ம் தேதி ஒரு செய்தி ஷேர் செய்யப்பட்டு இருந்தது. அதன் தலைப்பு “’வைரமுத்து இப்படி தடவினாரா அப்படி ஒரசினாரா..?’ நக்கீரன் […]

Continue Reading

மகாராஷ்டிராவில் போர் போடும்போது வந்த எரிமலைக் குழம்பு: வைரல் வீடியோவால் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Archived link போர் போடும் இயந்திரம் பற்றி எரிகிறது. தீயை அணைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். வீடியோவில், மகாராஷ்டிராவில் நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. ஆனால், இதை பகிர்ந்துள்ளவர்கள், “மகாராஷ்டிராவில் 1200 அடி ஆழத்துக்கு போர் போடும்போது எரிமலைக் குழம்பு வந்தது” […]

Continue Reading

கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாரா மோடி?

‘’எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை. ஆனால், மனிதர்கள்…,’’ என்ற தலைப்பில் கோட்சே சிலைக்கு மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாகக் கூறி ஒரு புகைப்பட பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்வதால், அதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Tamil Makkal என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை, கடந்த மே 15ம் தேதி வெளியிட்டுள்ளது. இப்பதிவில், காந்தி சிலைக்கும், காந்தியை கொன்றவர் சிலைக்கும் மோடி மாலை அணிவித்து […]

Continue Reading