யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா?

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்திப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதே புகைப்படங்களை வைத்து, ஃபேஸ்புக், எக்ஸ் வலைதளம் பலவற்றிலும் பதிவுகள் பகிரப்படுகின்றன. 

அவற்றில், ‘’ பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன்

ராகுல்காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

எவன் எவன் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறானோ அவனுடன் எல்லாம் பப்பு நட்பு பாராட்டுகிறார்🤬.’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த புகைப்படங்கள் உண்மையானது கிடையாது என்றும், எடிட் செய்யப்பட்டவை என்றும், தெரியவந்தது. இவற்றுக்கும், சர்ச்சைக்குரிய யூடியுபர் Jyoti Malhotra-க்கும் எந்த தொடர்பும் இல்லை. 

India Today l The New Indian Express l Free Press Journal 

ஆம், முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி Aditi Singh ஆவார். கடந்த 2018ம் ஆண்டு ஊடகங்களில் வெளியான புகைப்படத்தை தற்போது எடுத்து, அதிதி சிங் முகத்தை மற்றும் எடிட் செய்து, ஜோதி மல்ஹோத்ரா முகத்தை சேர்த்து, தவறாக பரப்புகின்றனர்.  

இதேபோன்று, இரண்டாவது புகைப்படம் ராகுல் காந்தி, Bharat Jodo Yatra சென்றபோது, கேரளாவில் அவரது ஆதரவாளர்களை சந்தித்தபோது எடுக்கப்பட்டது. இதனை கடந்த 2022ம் ஆண்டு ராகுல் காந்தியே அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், எடிட் செய்யப்பட்டவை என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா?

Written By: Pankaj Iyer 

Result: Altered

Leave a Reply