
‘’நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்’’, என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’நாதகவை தடை செய்ய கோரிக்கை
கலவரத்தை தூண்டும் வகையில் சீமான் செயல்படுவதால், நாதக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். – திமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஸ்டாலின் மனு! தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படுவதால் நாம் தமிழர் அங்கீகாரத்தை ரத்து செய்து, அக்கட்சியை தடை செய்ய வலியுறுத்தல்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
சன் நியூஸ் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டு உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட ஒன்று எனவும், சன் நியூஸ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு வேறு எனவும், தெரியவந்தது. இதுதொடர்பாக, சன் நியூஸ் ஊடகத்தின் ஆசிரியர் குழுவினரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
Sun News Link 1 l Sun News Link 2
இதன் மூலமாக, தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை முன்வைத்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லை என்பதும், அதிமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புகழேந்தி இவ்வாறு மனு செய்துள்ளதாகவும், நமக்கு தெளிவாகிறது.
உண்மையான நியூஸ் கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: ALTERED
