FactCheck: கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து அமித் ஷா பேசினாரா?
‘’கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
ஏப்ரல் 2, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்தை வைத்து, அருகில், ‘’கரூர் பரப்புரையில் அமித்ஷா பேச்சு. கோவையில் நேற்று நடந்தது மிகச் சிறிய விசயம். ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன. பாஜக ஊர்வலங்களின்போது கடைகளை அடைத்துவிடுவதுதான் வடமாநிலங்களில் வழக்கம்,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
Screenshot: FB posts with similar caption
உண்மை அறிவோம்:
யோகி ஆதித்யநாத், கோவை வந்து, பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து, பிரசாரம் செய்தார். இதன்போது, அங்கு சில கடைகள் மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக, செய்திகள் பரவின.
இதனை மையமாக வைத்து நிறைய போலிச் செய்திகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட செய்தியும்.
ஏற்கனவே, ‘’குறிப்பிட்ட செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது லோகோவுடன் பரவி வருவதால், எங்களுக்கு தேவையற்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபற்றி உண்மை சரிபார்த்து, செய்தி ஒன்றை வெளியிடுங்கள்,’’ என்று நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதா நம்மிடம் முறையிட்டிருந்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே, நியூஸ்7 தமிழ் அமித் ஷா பற்றி வெளியிட்ட உண்மையான செய்தியை கீழே இணைத்துள்ளோம். இதனை எடிட் செய்தே மேற்கண்ட தகவலை பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
குறிப்பிட்ட உண்மையான செய்தியையும், போலி நியூஸ் கார்டையும் ஒப்பிட்டு, கீழே மீண்டும் ஒருமுறை ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.