தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்தடை- தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்சாரம் நிறுத்தினால், விருந்தாளிகள் ஊர் திரும்பாமல் திருவிழா தடையின்றி நடைபெறும் என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

ஜூனியர் விகடன் லோகோ இணைத்து பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மின்சாரத்தை நிறுத்து! அரசுக்கு வேண்டுகோள். தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் காப்புக் கட்டிய நாள் முதல், திருவிழா முடிந்து அந்த ஊர்களுக்கு விருந்தினர்களாக வந்துள்ள விருந்தாளிகள் அவரவர் ஊருக்குத் திரும்பும் நாள் வரை அந்த ஊருக்கு மின்சாரம் வழங்கக் கூடாது. இறைவனின் சக்தியை விட மின்சார சக்தி ஒன்றும் பெரிதல்ல. – பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாடு மற்றும் இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தற்போது மின்தடை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கோடை காலம் என்பதால், மின்தடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதோடு, தொழில்துறை உற்பத்தியும் பெரிதும் பாதிக்கும் சூழல் நிலவுகிறது.

India Today Link I Hindustan Times Link 

இந்த சூழலில், மத்திய அரசு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு முறையான மின் விநியோகம், அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி விநியோகம் போன்றவை வழங்கவில்லை என்பதால், இந்த மின் தட்டுப்பாடு என்று அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Dinamani Link I Patrikai.com Link I oneindia tamil link

இந்நிலையில், மேற்கண்ட நியூஸ் கார்டை பகிர்ந்து, தமிழ்நாடு முழுக்க கோயில் தேர் திருவிழாக்கள் தடையின்றி நடைபெற மின்தடை அமல்படுத்தும்படி, தமிழ்நாடு அரசுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாக, தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில், இதனை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை. வழக்கம்போல, தங்களது பெயரில் பரவும் வதந்தி இது என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

எனவே, நடப்பு அரசியல் நிகழ்வுக்கு ஏற்ப அண்ணாமலை பெயரை பயன்படுத்தி, போலியான நியூஸ் கார்டை தயாரித்து பகிர்ந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்தடை- தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False