காரைக்காலில் மின்தடை; மக்கள் அவதி- திமுக அரசு காரணமா?
‘’காரைக்காலில் மின்தடை, விடியாத அரசின் அவலம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Twitter Claim Link l Archived Link
காரைக்கால் பகுதியில் தொடர் மின் தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் சாலை மறியல் செய்தனர் என்று தந்தி டிவி வெளியிட்ட செய்தியை எடுத்து, அதன் மேலே ‘’ இனி விடியாது தமிழகம், காரைக்கால் மாவட்டம் முழுவதும் மீண்டும் 2 மணிநேரத்திற்கும் மேலாக #தொடர்_மின்தடை பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் ,’’ என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
Hindu Tamil Link I Vikatan Link
இதுதொடர்பாக தந்தி டிவி வெளியிட்ட செய்தியை மேற்கண்ட ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளனர். உண்மையில் காரைக்காலுக்கும், தமிழ்நாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. காரைக்கால் புதுச்சேரி ஆளுகையின் கீழ் வரும் பகுதி. அங்கே பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த சூழலில், திமுகவை தொடர்புபடுத்தி, மேற்கண்ட ட்வீட்டை வெளியிட்டுள்ளது நகைமுரணாக உள்ளது.
திமுகவை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் அண்டை மாநில பிரச்னையை இணைத்து, ட்வீட் வெளியிட்டுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:காரைக்காலில் மின்தடை; மக்கள் அவதி- திமுக அரசு காரணமா?
Fact Check By: Fact Crescendo TeamResult: Partly False