2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐசிசி சிறந்த அணியில் அர்ஷ்தீப் சிங் பெயர் இடம்பெற்றதா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social விளையாட்டு

‘’2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி,’’ என்று குறிப்பிட்டு சன் நியூஸ் வெளியிட்ட ஒரு செய்தியை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, 2022ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை சிறந்த அணி பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அந்த பட்டியலில், மொத்தம் 12 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

Men’s T20 World Cup 2022

Men’s T20 World Cup 2022

Team of the Tournament

icc t20 world cup tournament team 

இந்தியாவைச் சேர்ந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், அர்ஷ்தீப் சிங் பெயர் இல்லை. மேலும், பட்டியலில் உள்ள சாம் கரண், ஹர்திக் பாண்டியா பெயரை சன் நியூஸ் குறிப்பிடவே இல்லை. 

எனவே, முழு விவரம் இன்றி சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது.  


இதுபற்றி நமது இலங்கைப் பிரிவினர் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 


FactCrescendo Srilanka Article Link

முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐசிசி சிறந்த அணியில் அர்ஷ்தீப் சிங் பெயர் இடம்பெற்றதா?

Fact Check By:  Fact Crescendo Team  

Result: MISLEADING