26 வயதான மணியம்மையை பெரியார் திருமணம் செய்தார்: ஃபேஸ்புக் கலாட்டா

அரசியல்

26 வயது வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொண்ட 72 வயது பெரியார், என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\maniammai 2.png

Facebook Link

Archived Link

தமிழ் சங்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஜூன் 20ம் தேதி பகிர்ந்துள்ளது. இதில், பெரியார் 26 வயதான மணியம்மையை திருமணம் செய்துகொண்டார் என்று கூறியதோடு, தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியில் வசைபாடியுள்ளனர். இதை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் தகவலில் கூறப்படுவதுபோல, 26 வயதான மணியம்மையை பெரியார் திருமணம் செய்யவில்லை. பெரியாரை திருமணம் செய்யும்போது, மணியம்மைக்கு 30 வயதாகிவிட்டது. இதுபற்றி நாம் ஏற்கனவே உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறோம். அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\maniammai 3.png

இவரது வாழ்க்கை வரலாறு பற்றி திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலை வெளியிட்ட கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.மணியம்மையின் வாழ்க்கை வரலாறு பற்றிய விக்கிப்பீடியா தமிழ் கட்டுரை விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, Scroll.in வெளியிட்ட செய்திக்கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, 30 வயது பூர்த்தியான மணியம்மையை தனது அரசியல் தேவைகளுக்காக பெரியார் திருமணம் செய்திருக்கிறார் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பெரியாரை திருமணம் செய்யும்போது, மணியம்மைக்கு 26 வயது இல்லை என்றும், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என்றும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:26 வயதான மணியம்மையை பெரியார் திருமணம் செய்தார்: ஃபேஸ்புக் கலாட்டா

Fact Check By: Parthiban S 

Result: False