ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு பரோல்; திமுக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சலா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு திமுக அரசு அடிக்கடி பரோல் தருவதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link 

உண்மை அறிவோம்: 

தமிழ்நாட்டில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், அரசியல் கட்சிகளை மையப்படுத்தி ஏராளமான வதந்திகள் நாள்தோறும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவை பற்றி அவ்வப்போது நாமும் செய்தி வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 I Fact Crescendo Tamil Link 2

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்தியே, மேற்கண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பற்றிய நியூஸ் கார்டும். உண்மையில், இதனை தந்தி டிவி வெளியிடவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனும் இவ்வாறு கருத்து வெளியிடவில்லை. இதுகுறித்து, நாம் தந்தி டிவி ஆசிரியர் குழுவினரிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு பரோல்; திமுக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சலா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False