
‘’ஜார்க்கண்டில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் செல்வதை தடுக்கும் வகையில் ரயில் பாதைக்கு வெடி வைத்த மாவோயிஸ்ட்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மை அறிவோம்:
இந்த ரயில் பாதையில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு வைத்த இடம் (Lotapahar) ஜார்க்கண்டில் Sonua – Chakradharpur இடையே உள்ளது. அது ஹவுரா – மும்பை இடையிலான ரயில் வழித் தடத்தில் அமைந்துள்ளது. இதுபற்றி ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.
அடுத்தப்படியாக, மேற்கண்ட மாவோயிஸ்ட் தாக்குதல் பற்றி ஜார்க்கண்ட் போலீசார் கூறுகையில், ‘’பாரத் பந்த் என்ற பெயரில், அப்பகுதியில், மாவோயிஸ்ட்கள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதையொட்டியே, குறிப்பிட்ட ரயில் வழித்தடத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்,’’ என்றனர்.

குறிப்பிட்ட வழித்தடம், ஹவுரா – மும்பை இடையே அமைந்துள்ளதாகும். அத்துடன், திங்கள்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற இந்த திடீர் தாக்குதல் காரணமாக, அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக, ரயில்வே நிர்வாகம் தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, ஜார்க்கண்ட் போலீஸ் அல்லது சம்பந்தப்பட்ட பகுதி ரயில்வே நிர்வாகம் என யாருமே, இந்த மாவோயிஸ்ட் தாக்குதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் செல்வதை தடுக்க நடத்தப்பட்டதுதான் என்று குறிப்பிடவில்லை.
இதற்கடுத்தப்படியாக, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் செல்லும் வழித்தடங்கள் பற்றி தகவல் தேடினோம்.
தற்போதைய சூழலில், துர்காபூர், ராய்காரில் இருந்து டெல்லிக்கும், பொகோராவில் இருந்து லக்னோவுக்கும், மும்பையில் இருந்து நாக்பூர் வழியாக விசாகப்பட்டினத்திற்கும், ஜாம்நகரில் இருந்து மும்பைக்கும், அங்குல் பகுதியில் இருந்து தெலுங்கானாவிற்கும், ஜாம்ஷெட்பூரில் இருந்து ஜபல்பூருக்கும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. எனவே, அந்த ரயில் வழித்தடத்திற்கும், குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த Lotapahar பகுதிக்கும், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் பயணத்தில் தொடர்புடைய, Rourkela, Raigarh, Angul, Kalingnagar, Bokaro, Jamnagar, Jamshedpur, Jabalpur, Vizag போன்ற பகுதிகளுக்கும் பல கிலோமீட்டர்கள் இடைவெளி உள்ளது.

குறிப்பிட்ட வழித்தடத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதால், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் பாதுகாப்பான வழித்தடங்களில்தான், டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மாவோயிஸ்ட்கள் வெடி வைத்து தகர்த்த ரயில் வழித்தடம், மும்பை – ஹவுரா இடைப்பட்டதாகும். அங்கே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் எதுவும் இயக்கப்படவில்லை. மாவோயிஸ்ட்கள், குறிப்பிட்ட Lotapahar உள்ளடக்கிய ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரத் பந்த் ஒன்றை ஏப்ரல் 26 அன்று நடத்தியுள்ளனர். அதையொட்டி, ரயில் பாதைக்கு வெடி வைத்து தகர்த்துள்ளனர். இதுபற்றி, சம்பந்தப்பட்ட மாவட்ட போலீசாரும், ரயில்வே நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளதாக, தெரியவருகிறது.
இதுதொடர்பாக, கூடுதல் ஆதாரங்கள் ஏதேனும் கிடைக்கும்பட்சத்தில் அதனையும் வெளியிட தயாராக உள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஜார்க்கண்டில் ரயில் தண்டவாளத்திற்கு வெடி வைத்த மாவோயிஸ்ட்கள்- ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் காரணமா?
Fact Check By: Pankaj IyerResult: Explainer
