ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று பாஜக-வின் நாராயணன் கூறினாரா?

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சத்யம் டிவி வெளியிட்ட யூடியூப் வீடியோ முகப்பை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போன்று ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் பாஜக தலைவரின் திமிர் பேச்சு” என்று இருந்தது. அதற்கு மேல், “திமுகவில் ஆம்பளைங்க யாராச்சும் இருந்தா இவரை குண்டாஸ் ல தூக்கிப் போட்ருப்பாங்க ல்ல? அச்சோ பாவம் திமுக நெலம” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “இப்ப சொல்லுங்கடா யாரு டா அடிமை. திமுக கொத்தடிமைஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Bharathi Raja Admk என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிக மோசமாக விமர்சித்ததாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். வழக்கம் போல இது போலியானதாக இருக்கலாம் என்று எண்ணி இது பற்றி ஆய்வைத் தொடங்கினோம்.

அந்த ஸ்கிரீன்ஷாட்டில் இருந்த “ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் பாஜக தலைவரின் திமிர் பேச்சு” என்ற வாக்கியத்தை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது சத்யம் டிவி வெளியிட்ட வீடியோ பதிவு நமக்கு கிடைத்தது. இந்த வாசகத்ததை தலைப்பாக அவர்கள் வெளியிட்டிருந்தனர். வீடியோவின் முகப்பு படமாக இந்த ஸ்கிரீன்ஷாட் இருந்தது.

சத்யம் டிவி வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்தோம். நாராயணன் திருப்பதி அப்படி கூறியதாக வீடியோவில் எங்கும் இல்லை. பரபரப்புக்காக அப்படி தலைப்பு வைத்தார்களா, அல்லது நாராயணன் திருப்பதி கூறியது விரைவில் வெளியாகும் என்று சொல்ல வருகிறார்களா என்று குழப்பத்தை அளித்தது அந்த வீடியோ. தலைப்புக்கும் வீடியோவுக்கும் தொடர்பு இல்லை என்பதன் மூலம் இந்த செய்தி தவறானது என்று உறுதியானது.

YouTube

ஒருவேளை நாராயணன் திருப்பதி வேறு ஏதாவது பேட்டியில், சமூக ஊடக பதிவில் அப்படி கூறினாரா என்று தேடிப் பார்த்தோம். நாராயணன் திருப்பதி அப்படி கூறியதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, அவரது சமூக ஊடக பக்கத்தை பார்வையிட்டோம்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது. அதில் “நான் சொல்லாததை சொன்னதாக (FAKE) பரப்பும், தமிழக முதல்வரை  @mkstalin  அவர்களை  இழிவுபடுத்தும்  இந்த நிறுவனத்தின் மீது தமிழக காவல் துறை @PoliceTamilnadu  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி நாராயணன் திருப்பதி அவதூறாகக் கூறினார் என்று பகிரப்படும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.

Archive

ஊடகம் ஒன்று பரபரப்பிற்காக, வெளியிட்ட செய்தியை, உண்மை என்று நம்பி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். நம்முடைய ஆய்வில் நாராயணன் திருப்பதி தான் அப்படி கூறவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மு.க.ஸ்டாலின் பாஜக கால்களை நக்குகிறார் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியதாக பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஸ்டாலின் எங்கள் கால்களை நக்குகிறார் என்று பாஜக-வின் நாராயணன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply