அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் உண்மையா?

கல்வி சமூக ஊடகம்

அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\anna university 2.png

Facebook Link I Archived Link

Samayam Tamil இந்த பதிவை கடந்த 28, ஜூன் 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், அவர்களின் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் லிங்கையும் இணைத்துள்ளனர். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு போல வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என தேடிப் பார்த்தோம். அப்போது, Ponni Ravi என்பவர் 29, ஜூன், 2019 அன்று இதே பதிவை அச்சு மாறாமல் பகிர்ந்த விவரம் கிடைத்தது.

Facebook Link I Archived Link

உண்மை அறிவோம்:
இவ்வளவு தெளிவாக ஒரு வாட்ஸ்அப் வதந்தியை உண்மை போல இவர்கள் பகிர்ந்துள்ளனர். இப்படி எந்த காலேஜ் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. இது முற்றிலும் தவறான தகவல். சமூக ஊடகங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் இப்படி தவறான தகவல் பகிரப்படுவதை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகமே இதுபற்றி மறுப்பு தெரிவித்து, விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\anna university 5.png

இதுபற்றி தினகரன் இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, இதன்பேரில், அண்ணா பல்கலைக்கழகம் ஏதேனும் செய்தியறிக்கை வெளியிட்டுள்ளதா என தகவல் தேடினோம். அப்போது, அவர்கள் வெளியிட்ட பிரஸ் ரிலீஸ் ஒன்றின் விவரம் கிடைத்தது. அதனை கீழே இணைத்துள்ளோம்.

C:\Users\parthiban\Desktop\anna university 6.png

இதன்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளில் உள்ளதுபோல, தரமற்ற 89 காலேஜ்களின் பட்டியல் எதையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என்பது உறுதியாகிறது.

சமீபத்தில், உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு தரக்குறைவாக உள்ள 92 என்ஜீனியரிங் காலேஜ்களின் பட்டியல் என்ற பெயரில் ஒரு விவரவத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த பட்டியலில் குறிப்பட்ட 92 காலேஜ்களின் பெயரை மட்டுமே குறிப்பிடாமல், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட தமிழகத்தில் உள்ள 557 என்ஜீனியரிங் காலேஜ்களின் முழு விவரத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுவிட்டது. இது பல தரப்பிலும் விமர்சனத்திற்கு ஆளான நிலையில், சிலர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில், 89 தரமற்ற என்ஜீனியரிங் காலேஜ்கள் என்று கூறி தவறான வதந்தியை பரப்ப தொடங்கிவிட்டனர். இதுதான் இந்த விசயத்தின் பின்னணி.

இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

C:\Users\parthiban\Desktop\anna university 7.png

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, 89 காலேஜ்களின் பட்டியல் என சமூகஊடகங்களில் பகிரப்படும் விவரத்தில் உண்மையில்லை. அதனை அண்ணா பல்கலைக்கழகமே மறுத்துள்ளது. அதேசமயம், 92 காலேஜ்கள் தரமற்றதாக உள்ளதென்றும், அவை பற்றி தனியாக பட்டியல் வெளியிடாமல், மொத்தமாக 557 காலேஜ்களுடன் சேர்த்தும் அண்ணா பல்கலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், சில தனிநபர்கள் சரியான விவரம் தெரியாமல் ஒட்டுமொத்தமாக 89 காலேஜ்களின் பெயரை குறிப்பிட்டு தகவல் பகிர்வது மாணவர்களை குழப்புவதாக உள்ளது. எனவே, இந்த செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.  

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் செய்தியில் உண்மையும், தவறும் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:அண்ணா பல்கலை வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •