FactCheck: சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
‘’சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதன்படி, திமுக ஆட்சிக்கு அமைந்ததும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதைப் போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட் உறுதிப்படுத்துகிறது.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வன்னியருக்கு 10.5 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமீபத்தில், அதிமுக அரசு மசோதா நிறைவேற்றியது. அன்றைய நாள் முதலாக, சமூக வலைதளங்களில் நிறைய வதந்திகள், ஆதரவாகவும், எதிராகவும் பகிரப்பட்டு வருகின்றன.
நாமும், அவை பற்றி ஆய்வு செய்து, அவ்வப்போது செய்தியும் வெளியிட்டு வருகிறோம்.
அந்த வரிசையில், பகிரப்படும் மற்றொரு வதந்தியே, மேற்கண்ட செய்தியும். ஆம், இப்படி செய்தி வெளியிட்டது உண்மையா என்று, தந்தி டிவியின் சமூக வலைதள பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். இது போலிச் செய்தி, என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, உண்மையான நியூஸ் கார்டு நமக்குக் காண கிடைத்தது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இது தவிர போலியான நியூஸ் கார்டுடன் உண்மையானதையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
இது மட்டுமின்றி, தந்தி டிவி ஃபேஸ்புக் பக்கத்திலும் இதே டெம்ப்ளேட் வைத்து மார்ச் 28, 2021 அன்று பகிரப்பட்ட மற்ற இரு நியூஸ் கார்டுகளின் லிங்கையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered