
‘’உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் சூரிய மின் தகடுகளை அடித்து நொறுக்கும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
இதில், ஆண், பெண்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டபடி, சுத்தியலால் சூரிய மின் தகடுகளை உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்களை பார்த்தால் வட இந்தியர் போல உள்ளனர். ‘’சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்தால் சூரியன் பகவான் பலவீனமடைவார் என்று உத்தரப் பிரதேச பாஜக தலைவர் அசோக் சக்சேனா எம்.பி. கூறியதால் பாஜகவினர் இப்படி சூரிய மின் தகடுகளை அடித்து உடைப்பதாக,’’ இந்த பதிவில் எழுதப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் தேடியபோது, ஏற்கனவே கடந்த ஆண்டில் இதுதொடர்பான வதந்தி பகிரப்பட்டிருந்ததை கண்டோம்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோ உண்மையா என்ற சந்தேகத்தில் கூகுளில் விவரம் தேட தொடங்கினோம். அப்போது இது தவறான தகவல் என தெரியவந்தது. ஆம், இதுபற்றி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதில், மகாராஷ்டிரா மாநிலம், சாலிஸ்கான் (Chalisgaon) பகுதியில் நிறுவப்பட்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் தராத காரணத்தால் அவர்கள் அனைவரும் கோபமடைந்து அங்கிருந்த மின் தகடுகளை அடித்து நொறுக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய வீடியோ மற்றும் செய்தியின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Climatesamurai.com Link | Archived Link |
எனவே, 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உத்தரப் பிரதேச அரசியலுடன் தொடர்புபடுத்தி தவறான தகவலை பகிர்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இதுபற்றி ஏற்கனவே பல்வேறு உண்மை கண்டறியும் ஊடக நிறுவனங்கள் சோதனை செய்து முடிவுகளை சமர்ப்பித்துள்ளன. அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
Altnews Link | Smhoaxslayer Link | Theprint Link | The Observers Link |
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் சூரிய மின் தகடுகளை அடித்து நொறுக்கினார்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
