சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா?

Coronavirus சமூக ஊடகம் சர்வதேசம்

‘’சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடிக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

பிப்ரவரி 23, 2020 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட வீடியோவை ஒருமுறை நன்றாக பார்வையிட்டோம். அதன்போது, சில போலீஸ் அதிகாரிகள் சுங்கச்சாவடி ஒன்றில் வரும் காரை வழிமறித்து வைரஸ் சோதனை செய்கிறார்கள், காரில் வந்த நபருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தியதும் அவரது தலைமீது வலைவீசி பிடித்து அப்புறப்படுத்துகின்றனர்.

ஆனால், வீடியோவில் வரும் போலீஸ் அதிகாரிகளின் சீருடையில் SWAT என அச்சிடப்பட்டுள்ளது. இது சிறப்புப் படையினரை குறிப்பதாகும். அத்துடன், சீன எழுத்துகளில் நிறைய வாசகங்களை காண முடிகிறது. அதன் ஊடாக, ஆங்கிலத்தில் Exercises என எழுதியதை கண்டோம். இதைப் பார்த்ததும், ஒருவேளை வைரஸ் தொற்றை சமாளிப்பது தொடர்பான பயிற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. 

எனவே, இந்த வீடியோ பற்றி வேறு ஏதேனும் செய்தி ஆதாரம் கிடைக்கிறதா என்ற நோக்கில் வெவ்வேறு கீவேர்ட்களை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது, இதேபோல ஒரு ட்விட்டர் பதிவை கண்டோம். அந்த பதிவில், கொரோனா வைரஸ் பாதித்தவரை சீன போலீசார் நடத்தும் விதம், எனக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தனர். 

Archived Link

இந்த ட்விட்டர் பதிவை பலரும் பகிர, அதனைப் பின்பற்றியே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெளிவாகிறது. 

இதையடுத்து, இதுபற்றிய செய்தி அல்லது வீடியோ ஆதாரங்கள் கிடைக்கிறதா என வெவ்வேறு கீவேர்ட் பயன்படுத்தி தேடினோம். இதன்பேரில் சில செய்தி ஆதாரங்கள் கிடைத்தன.   

மேற்கண்ட வீடியோ கடந்த ஒரு வாரமாக இணையத்தில் பரவி வருகிறது. இது கொரோனா வைரஸ் தடுப்பு பற்றி சீன போலீசார் நடத்திய ஒத்திகைப் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதனை முதலில் சீன போலீசார் ட்விட்டரில் பகிர அதனை பலரும் தவறாகப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்ய, இது படிப்படியாக வேறொரு அர்த்தத்துடன் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியுள்ளது. 

இதுதொடர்பாக, தி டெலிகிராப் ஊடகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

The Telegraph Twitter LinkArchived Link

இதன்படி, சீனாவில் உள்ள Tongbai County பகுதியில் போலீசார் இந்த ஒத்திகை நடத்தியுள்ளது தெளிவாகிறது. 

NY Post Link Fact Crescendo Srilanka Link

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். சீன போலீசார் நடத்திய ஒத்திகையை உண்மைச் சம்பவம் என நினைத்து வதந்தி பரப்பியுள்ளனர். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False