இயக்குனர் சுந்தரராஜன் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் பரபரப்பு

அரசியல் சினிமா

‘’இயக்குனர் சுந்தரராஜன் மரணம்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இதன்பேரில் ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே இதுபற்றி சுந்தரராஜன், அவரது மகன் மூலமாக ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் தோன்றி இது வெறும் வதந்திதான் என மறுப்பு தெரிவித்துவிட்டார். 

Facebook LinkArchived Link

இதுபற்றி ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. சினிமா சார்ந்த செய்திகளை பிரத்யேகமாக வழங்கி வரும் Indiaglitz இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுமட்டுமின்றி, இப்படி ஒரு வதந்தி திடீரென சுந்தரராஜன் பற்றி பரவியதற்கு என்ன காரணம் என்பது தொடர்பான ஒரு செய்தியை ஒன்இந்தியா இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

அதாவது, ‘’ரஜினி கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே இறந்துவிடுவார். அந்த அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது,’’ என்று இயக்குனர் சுந்தரராஜன் சமீபத்தில் விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பழிவாங்கும் வகையில் அவர் இறந்துவிட்டதாக, ரஜினி ரசிகர்கள் சிலர் வதந்தி பரப்பியதாக ஒன் இந்தியா செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

OneIndia Tamil News LinkArchived Link

எனவே, அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய வதந்தியை சிலர் பகிர்ந்துள்ளனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:இயக்குனர் சுந்தரராஜன் மரணம் என்று பகிரப்படும் வதந்தியால் பரபரப்பு

Fact Check By: Pankaj Iyer 

Result: False