பாபர் மசூதியின் கம்பீர தோற்றம்: ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

அரசியல் சமூக வலைதளம்

‘’பாபர் மசூதியின் கம்பீர தோற்றம்,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link Archived Link 

இது உண்மையான பாபர் மசூதி என ஃபேஸ்புக் பதிவர்கள் நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாபர் மசூதி இடிப்பு என்பது இந்தியா மட்டுமின்றி உலக முஸ்லீம் நாடுகளிலும் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரமாகும். 

இந்த விவகாரத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டவும், அயோத்தி பகுதியிலேயே வேறொரு இடத்தை முஸ்லீம்களுக்கு அளித்து மசூதி கட்ட உதவி செய்யவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

அயோத்தி இட விவகாரம் பற்றிய தீர்ப்பு வெளியாகிய பிறகு, சமூக ஊடகங்களில் பலவித வதந்திகள் பகிரப்படுவது அதிகமாகியுள்ளது. அதில் ஒன்றுதான் மேற்கண்ட புகைப்பட தகவலும்.

உண்மையில் அது அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கிடையாது. அது குஜராத் மாநிலம், ஜூனாகத் நகரில் உள்ள Jama Masjid ஆகும். இதனை The Mahabat Maqbara Mosoleum என்றும் அழைக்கிறார்கள். 

எனவே ஏற்கனவே இடிக்கப்பட்டுவிட்ட பாபர் மசூதியின் கம்பீர தோற்றம் எனக் கூறி, ஜூனாகத் மசூதியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர் என தெளிவாகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பாபர் மசூதியின் கம்பீர தோற்றம்: ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False