சீமானை விமர்சித்த ஹரி நாடார்: நியூஸ்7 செய்தி உண்மையா?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடார் விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
நியூஸ் 7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "சுயேட்சையாக நின்ற என்னை ஜெயிக்க துப்பில்லை, நடிகர் ரஜினிகாந்த் பற்றி நீங்கள் பேசலாமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஹரி நாடார் கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை Vinod Kanna என்பவர் 2019 நவம்பர் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நியூஸ் 7 தமிழ் பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய நியூஸ் கார்டு இது. நாங்குநேரி இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட ஹரிநாடார் என்பவர் அதிக வாக்குகளைப் பெற்றார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் நாங்குநேரி இடைத்தேர்தலைப் பற்றி சொல்கின்றனர். எனவே, இந்த நியூஸ் கார்டு பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது என்று கூறமுடியாது.
1) இந்த டிசைன் நியூஸ் கார்டை தற்போது நியூஸ்7 தமிழ் பயன்படுத்துவது இல்லை. புதிய டிசைன் கார்டு அவர்களுடைய சமூக ஊடக பக்கங்களில் காணலாம்.
2) வழக்கமாக நியூஸ் 7 வெளியிடும் நியூஸ் கார்டுகளில் தேதி, நேரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் தேதி, நேரம் இடம்பெறவில்லை.
3) தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளது.
இந்த காரணங்கள் அடிப்படையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார். அதன் பிறகு சீமானை விமர்சித்து ஹரிநாடார் என்பவர் பேட்டி ஏதும் அளித்திருந்தாரா என்று தேடிப் பார்த்தோம். அதுபோல எந்த ஒரு பேட்டியும் கிடைக்கவில்லை.
Search Link |
இந்த நியூஸ்கார்டை பகிர்ந்தவரின் பின்னணியைப் பார்த்தோம். நடிகர் ரஜினி படத்தை தன்னுடைய ப்ரொபைல் படமா வைத்திருந்தார். சீமான் ரஜினிகாந்த்தை விமர்சித்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவருடைய ரசிகர்கள் இந்த நியூஸ் கார்டை உருவாக்கி பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த நியூஸ் கார்டு குறித்து நியூஸ்7 தொலைக்காட்சியைத் தொடர்புகொண்டு கேட்டோம். நம்மிடம் பேசியவர்கள், "இந்த நியூஸ் கார்டு தவறானது, நியூஸ்7 தமிழ் வெளியிட்டது இல்லை" என்றனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில். சீமானை விமர்சித்து ஹரிநாடார் பேட்டி அளித்தார் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:சீமானை விமர்சித்த ஹரி நாடார்: நியூஸ்7 செய்தி உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False