எச்.ராஜா ஒரு மன நோயாளி என்று அவரது மாப்பிள்ளை சொன்னாரா?

அரசியல் சமூக வலைதளம்

‘’எச்.ராஜா ஒரு மன நோயாளி என்று கூறி அவரது மாப்பிள்ளை தகராறு,’’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 
தமிழ்நாட்டு சங்கி

என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை நவம்பர் 15 அன்று பகிர்ந்திருக்கிறார். இது ஃபேக் ஐடியாக இருந்தாலும், பதிவு என்னமோ உண்மை போலவே இருப்பதால், பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான வீடியோ செய்தி கீழே பகிரப்பட்டுள்ளது. 

Asianet Tamil News Link Thanthi TV Video Link 

இந்நிலையில்தான் மேற்கண்ட செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. உண்மையில், அது நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி இல்லை. பார்க்கும்போதே அது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என தெளிவாக தெரிகிறது.

அந்த நியூஸ் கார்டில், வாக்கியப் பிழைகளுடன் செய்தி எழுதப்பட்டுள்ளதோடு, அதில் நியூஸ் 7 பெயர் இல்லாமல் வேறு ஒரு லோகோ இடம்பெற்றுள்ளது. இப்படி எந்த நிகழ்வும் எச்.ராஜா மகள் திருமணத்தில் நடைபெறவில்லை. திருமணத்தின் வீடியோ ஆதாரமும் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இதே நியூஸ் கார்டை fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி சரிபார்த்தோம். அப்போது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட ஒன்று என தெளிவாக தெரியவந்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,

1) எச்.ராஜா மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது.
2) இப்படி எந்த நிகழ்வும் எச்.ராஜா மகளது திருமணத்தில் நடைபெறவில்லை.
3) நியூஸ் 7 தொலைக்காட்சி பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலியான செய்தி இது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:எச்.ராஜா ஒரு மன நோயாளி என்று அவரது மாப்பிள்ளை சொன்னாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •